டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தை பெண்கள் முற்றுகை
கடையம் அருகே டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் நேற்று நெல்லை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் குறை தீர்க்கும் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை,
நெல்லை மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கி, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கினார்.
கடையம் அருகே உள்ள மந்தியூர் பகுதியை சேர்ந்த ரவணசமுத்திரம், ராமலிங்கபுரம், மாலிக்நகர், பிள்ளையார்குளம், வாகைகுளம், மீனாட்சிபுரம் ஆகிய ஊர்களை சேர்ந்த பெண்கள் வட்டார காங்கிரஸ் தலைவர் மாரியப்பன், காங்கிரஸ் முன்னாள் மாவட்ட துணை தலைவர் ஆதிமூலம் ஆகியோர் தலைமையில் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து தங்கள் ஊர் அருகில் டாஸ்மாக் கடை அமைக்கக்கூடாது என்று கூறி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து அவர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில், கடையம் அருகே உள்ள மீனாட்சிபுரத்திற்கு தெற்கே சிவசைலம் செல்லும் ரோட்டின் கீழ்புறத்தில் முல்லிமலை பொத்தைக்கு அருகில் டாஸ்மாக் கடை அமைக்க கட்டிடம் கட்டுகிறார்கள். அந்த இடத்தில் டாஸ்மாக் கடை அமைக்கக்கூடாது. மீறி அமைப்பதால் பொதுமக்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கூறி உள்ளனர்.
நெல்லை அருகே உள்ள ராமையன்பட்டி ஏ.எப்.காலனியை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து தங்கள் ஊரில் டாஸ்மாக் கடை அமைக்கக்கூடாது என்று கூறி மனு கொடுத்தனர். இதேபோல் பாவூர்சத்திரம் அருகே உள்ள பெத்தநாடார்பட்டி கிராம மக்கள் மருதடியூர் வெள்ளையநாடானூரில் டாஸ்மாக் கடை அமைக்கக்கூடாது என்று கூறி மனு கொடுத்தனர்.
பாவூர்சத்திரம் அருகே உள்ள பெத்தநாடார்பட்டி, சாலைப்புதூர், மகிழ்வண்ணநாதபுரம், சண்முகபுரம், இலங்காபுரிபட்டினம், பொட்டலூர், முருகன்குறிச்சி, சித்திரபுத்திரனூர், பெருமாள்புரம் ஆகிய ஊர்களை சேர்ந்த பொதுமக்கள் 25–க்கும் மேற்பட்ட வேன்களில் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து மனு கொடுத்தனர்.
அந்த மனுவில், எங்கள் ஊர்மக்கள் பெத்தநாடார்பட்டி மாயாண்டி கோவிலில் வழிபாடு நடத்தி வருகிறோம். இந்த கோவிலில் உள்ள கூம்பு வடிவ ஒலிபெருக்கியை அகற்றிவிட்டோம். இருந்தாலும் கோவில் நிர்வாகி ஆனந்த்மணிவேலன் மீது வழக்கு பதிவு செய்து உள்ளனர். அந்த வழக்கை ரத்து செய்யவேண்டும் என்று கூறி உள்ளனர்.
மானூர் அருகே உள்ள கீழபிள்ளையார்குளம் கிராம மக்கள் காலிகுடங்களுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து அவர்கள் தங்கள் ஊரில் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தி கலெக்டரிடம் மனு கொடுத்தனர். இதேபோல் ஆழ்வாநேரி கோவைகுளம் கிராம மக்கள் தங்கள் ஊருக்கு குடிநீர் சீராக வழங்க வேண்டும் என்று கூறி மனு கொடுத்தனர்.
சுதந்திர தின விழாவை முன்பு போல் பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்திலேயே நடத்த வேண்டும் என்று சட்ட பஞ்சாயத்து இயக்கத்தினர் மனு கொடுத்தனர். அம்பை அருகே உள்ள ஆம்பூரை விக்கிரமசிங்கபுரம் நகரசபையுடன் இணைக்கக்கூடாது என்று அந்த ஊர் மக்கள் மனு கொடுத்தனர்.
சிவகிரி அருகே உள்ள சங்குபுரத்தை சேர்ந்த விவசாயி சின்னமாடசாமி தனது குடும்பத்தோடு கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு கொடுத்தார். அந்த மனுவில், சங்குபுரம் பஞ்சாயத்தில் அரசு சார்பில் வீடுகள் கட்டிக்கொடுத்ததில் முறைகேடு நடந்தாக புகார் தெரிவித்தேன். மேலும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவலும் கேட்டேன். இதனால் பஞ்சாயத்து நிர்வாகத்தில் இருந்த முக்கிய பிரமுகர்கள் என் குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துவிட்டனர். இதில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
நெல்லை பகுதியை சேர்ந்த பிளஸ்–2 முடித்த மாணவிகள் தங்கள் குடும்பத்தினருடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து பிளஸ்–2 தேர்வில் நாங்கள் எடுத்த கட்–ஆப் அடிப்படையில் மருத்துவ படிப்புக்கு இடம் வழங்க வேண்டும். நீட் தேர்வு முடிவை எடுத்துக்கொள்ள கூடாது என்று கூறி மனு கொடுத்தனர்.
துப்புரவு தொழிலாளர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்று கூறி ஆதிதமிழர் கட்சியின் மாநகர ஒருங்கிணைப்பாளர் சேப்பா முகத்தை துணியால் மூடியபடி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு கொடுத்தார்.
நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட பேட்டை 45–வது வார்டு பகுதியில் குண்டும்–குழியுமாக உள்ள சாலையை உடனே சீரமைத்து தரவேண்டும் என்று கூறி நாம் தமிழர் கட்சியின் மாவட்ட தலைவர் செல்வானந்த் கலெக்டரிடம் மனு கொடுத்தார்.
பணகுடி அருகே உள்ள அழகியநம்பியாபுரத்தை சேர்ந்த விவசாயிகள் தமிழ்மாநில காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜோதி, ம.தி.மு.க. ஒன்றிய செயலாளர் முருகேசன், சுப்பையா ஆகியோர் தலைமையில் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு கொடுத்தனர். அந்த மனுவில், நெல்லை மாவட்டம் காவல்கிணறு அருகே உள்ள மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு விளைநிலங்களை கையகப்படுத்துவதை உடனே தடுத்து நிறுத்த வேண்டும். இல்லையெனில் மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கூறி உள்ளனர்.

Related Tags :
Next Story