பாம்பன் ரெயில்வே பாலத்தின் தண்டவாளத்தின் உறுதி தன்மையை அதிகரிக்கும் பணி தீவிரம்


பாம்பன் ரெயில்வே பாலத்தின் தண்டவாளத்தின் உறுதி தன்மையை அதிகரிக்கும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 2 Aug 2017 4:00 AM IST (Updated: 2 Aug 2017 12:24 AM IST)
t-max-icont-min-icon

பாம்பன் ரெயில்வே பாலத்தின் நுழைவு பகுதியில் அதி நவீன பேக்கிங் என்ஜின் மூலம் தண்டவாளத்தின் உறுதி தன்மையை அதிகரிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

ராமேசுவரம்,

ராமேசுவரத்தில் இருந்து மதுரை, சென்னை, திருச்சி, கன்னியாகுமரி, திருப்பதி, கோவை உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு இயக்கப்படும் ரெயில்கள் மானாமதுரை வரை மணிக்கு 90 கிலோ மீட்டர் வேகத்திலும், மானாமதுரையில் இருந்து மதுரை வரையிலும் 100 கிலோ மீட்டர் வேகத்திலும் இயக்கப்பட்டு வருகின்றன. பாம்பன் கடலில் உள்ள ரெயில் பாலத்தில் செல்லும் அனைத்து ரெயில்களுமே பாதுகாப்பு கருதி 15 கிலோ மீட்டர் என மிக குறைந்த வேகத்திலேயே இயக்கப்பட்டு வருகின்றன.

ராமநாதபுரம்–ராமேசுவரம் இடை உள்ள ரெயில்வேகேட் அமைந்துள்ள தண்டவாள பகுதிகளில் தணடவாளத்தின் உறுதி தன்மையை அதிகரிப்பதற்காக மதுரையில் இருந்து பேக்கிங் என்ஜின் கொண்டு வரப்பட்டு அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் நேற்று ராமேசுவரம் அருகே உளள் பாம்பன் ரெயில்வே பாலத்தின் நுழைவு பகுதியில் இருந்து ரெயில்வே கேட் வரையிலும் உள்ள தண்டவாளங்களின் உறுதி தன்மையை அதிகரிப்பதற்காக பணிகள் நடைபெற்றன.ரெயில்வே கேட்டின் அருகில் உள்ள தண்டவாளங்களின் இடைப்பட்ட பகுதியில் இருந்து பாலத்தின் நுழைவு பகுதி வரையிலும் சிலிப்பர் கட்டைகள் அகற்றப்பட்டு தண்டவாளத்தின் பகுதிகளில் ஜல்லி கற்கள் கூடுதலாக கொட்டப்பட்டன.அதன் பின்பு மண்டபம் ரெயில்வே நிலையத்தில் இருந்து அதிநவீன பேக்கிங் என்ஜின் பாம்பன் ரெயில் பாலம் வழியாக கொண்டு வரப்பட்டு பாலத்தின் நுழைவு பகுதியில் இருந்து கேட் வரையிலும் ஜல்லிகற்கள் கொட்டப் பட்ட இடங்களில் பேக்கிங் என்ஜின் மூலம் தண்டவாளத்தின் அதிர்வுகள் சரி செய்யப்பட்டு உறுதி தன்மைகளும் அதிகரிக்கப்பட்டன.தொடர்ந்து சிலிப்பர் கட்டைகள் தண்டவாளத்தின்இடையில் மீண்டும் அமைக்கப்பட்டு மராமத்து பணிகள் நடை பெற்றன. தண்டவாளங்களின் உறுதி தன்மையை அதிகரிப்பதற்கான பணிகள் ரெயில்கள் செல்லாதநேரங்களில் நடைபெற்றதுடன் பகல் முழுவதும் ரெயில்வே கேட் அடைக்கப்பட்டே மராமத்து பணிகள் நடைபெற்றன.

இது பற்றி ரெயில்வே உயர்அதிகாரி ஒருவர் கூறியதாவது ;

ராமநாதபுரம் ராமேசுவரம் இடைப்பட்ட பகுதியில் 10–க்கும் மேற்பட்ட ரெயில்வே கேட்கள் அமைந்துள்ளது.இந்த ரெயில்வே கேட்கள் வழியாக ரெயில்கள் செல்லும் போது வழக்கத்தை விட அதிர்வுகள் அதிகமாக இருந்து வருகின்றது.அதனால் ரெயில்வே கேட் பகுதியில் உள்ள தண்டவாளங்களில் கூடுதலாக ஜல்லி கற்கள் கொட்டப்பட்டு தண்டவாளங்களின் உறுதி தன்மையை அதிகரிப்பதற்கான மராமத்து பணிகள் கடந்த 3 நாட்களுக்கு மேலாகவே மேலாகவே நடைபெற்று வருகின்றன.தற்போது பாம்பன் ரெயில் பாலத்தின் நுழைவு பகுதியில் இருந்து ரெயில்வே நிலையத்திற்கும் இடைப்பட்ட பகுதியில்அமைந்துள்ள ரெயில்வே கேட் வரையிலும் உள்ள தண்டவாள பாதைகளில் கூடுதலாக ஜல்லி கற்கள் கொட்டப்பட்டு அதி நவீன பேக்கிங் என்ஜின் மூலம் தண்டவாளத்தின் உறுதி தன்மையானது அதிகரிக்கப்பட்டு வருகின்றன.தொடர்ந்து ராமேசுவரம் ரெயில்வே நிலையம் வரையிலும் உள்ள கேட் அமைந்துள்ள பகுதிகளில் இந்த மராமத்து பணிகள் இன்னும் 1 வாரத்திற்கு நடைபெறும்.

 இவ்வாறு அவர் கூறினார்.


Next Story