ஜி.எஸ்.டி. வரி விதிப்பை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


ஜி.எஸ்.டி. வரி விதிப்பை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 2 Aug 2017 4:15 AM IST (Updated: 2 Aug 2017 1:06 AM IST)
t-max-icont-min-icon

ஜி.எஸ்.டி. வரி விதிப்பை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் திருவாரூரில் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர்,

மத்திய அரசு ஜி.எஸ்.டி. வரி விதிப்பை அமல்படுத்தியது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. ஆதலால் ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே ஜி.எஸ்.டி. வரி விதிப்பை கண்டித்து திருவாரூர் பஸ் நிலையம் அருகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயலாளர் நாகராஜன் தலைமை தாங்கினார். மாநிலக்குழு உறுப்பினர் மாரிமுத்து கலந்து கொண்டு பேசினார். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் சுப்பிரமணியன், பாலசுப்பிரமணியன், ஒன்றிய செயலாளர்கள் இடும்பையன், ராஜேந்திரன், கெரக்கோரியா, நகர செயலாளர் ராமசாமி, மாதர் சங்க மாவட்ட செயலாளர் கோமதி உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கையை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். 

Next Story