வியாபாரியிடம் வெள்ளி பொருட்களை பறித்துச்சென்ற 2 பேர் கைது


வியாபாரியிடம் வெள்ளி பொருட்களை பறித்துச்சென்ற 2 பேர் கைது
x
தினத்தந்தி 2 Aug 2017 4:45 AM IST (Updated: 2 Aug 2017 2:16 AM IST)
t-max-icont-min-icon

ஏத்தாப்பூர் அருகே நகை வியாபாரியிடம் வெள்ளி பொருட்களை பறித்துச்சென்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

பெத்தநாயக்கன்பாளையம்,

சேலம் மாவட்டம் ஏத்தாப்பூரில் நகை கடை வைத்திருப்பவர் செல்வமணி (வயது 58). இவர் நேற்று சேலத்தில் இருந்து வெள்ளி பொருட்களை வாங்கிக் கொண்டு பஸ்சில் புத்திர கவுண்டம்பாளையம் வந்தார். மதியம் 2.30 மணியளவில் பஸ்சில் இருந்து இறங்கிய அவர் அங்கிருந்து கடையை நோக்கி சென்று கொண்டு இருந்தார். அப்போது திடீரென அங்கு வந்த 2 பேர் செல்வமணி வெள்ளி பொருட்கள் வைத்திருந்த பையை பறித்துக் கொண்டு ஓடத்தொடங்கினார்கள்.

இதை பார்த்த செல்வமணி சத்தம் போட்டார். உடனே அருகில் நின்றவர்கள் அங்கு ஓடி வந்து 2 பேரையும் விரட்டி பிடித்தனர். பின்னர் போலீசில் அவர்களை ஒப்படைத்தனர்.

விசாரணையில், அவர்கள் சேலம் பொன்னம்மாபேட்டை வாய்கால்பட்டறையை சேர்ந்த ரபீக் (28), பொன்னம்மாபேட்டை ரெயில்வே கேட் பகுதியை சேர்ந்த மாதேஷ் (41) என்பது தெரியவந்தது. 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

ஏத்தாப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணகுமார் இதுகுறித்து விசாரணை நடத்தினார். கைதான 2 பேரிடம் இருந்து ஒரு கிலோ வெள்ளி பொருட்கள் மீட்கப்பட்டன. 

Related Tags :
Next Story