மின்சார ரெயில் வாசலில் நின்று பயணம் செய்த வாலிபர் இரும்புதூணில் மோதி பலி
மின்சார ரெயில் வாசலில் நின்று பயணம் செய்த வாலிபர் இரும்பு தூணில் மோதி கீழே விழுந்து பலியானார்.
மும்பை,
மின்சார ரெயில் வாசலில் நின்று பயணம் செய்த வாலிபர் இரும்பு தூணில் மோதி கீழே விழுந்து பலியானார். அவரை காப்பாற்ற முயன்றவரும் பரிதாபமாக உயிரிழந்தார்.
வாசலில் நின்று பயணம்மும்பை அந்தேரி பகுதியை சேர்ந்தவர் ஆசிப் அன்சாரி (வயது 20). இவரது நண்பர் அதே பகுதியை சேர்ந்த ஷான்நவாஸ் (16). இவர்கள் சம்பவத்தன்று 3 நண்பர்களுடன் மகாலெட்சுமி பகுதிக்கு விரைவு மின்சார ரெயிலில் சென்றனர். மின்சார ரெயிலில் கூட்டம் குறைவாகவே இருந்தது. எனவே 3 நண்பர்கள் 2–ம் வகுப்பு பெட்டியில் காலியாக இருந்த இருக்கைகளில் அமர்ந்தனர். ஆனால் ஆசிப் அன்சாரியும், ஷான்நவாசும் வாசல்படியில் நின்று பயணம் செய்தனர்.
2 பேர் பலிரெயில் லோயர் பரேல் அருகே சென்ற போது ஷான்நவாஸ் தண்டவாளத்தின் ஓரத்தில் இருந்த இரும்பு தூணில் மோதினார். இதில் அவர் நிலைகுலைந்து ஓடும் ரெயிலில் இருந்து கீழே விழுந்தார். இதைபார்த்து பதறிப்போன ஆசிப் அன்சாரி அவரை பிடிக்க முயன்றார். ஆனால் அவரும் தடுமாறி கீழே விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த மற்ற நண்பர்கள் அபாயசங்கிலியை இழுத்து ரெயிலை நிறுத்த முயன்றனர். ஆனால் ரெயில் மும்பை சென்டிரலில் தான் நின்றது.
அங்கு இருந்து நண்பர்கள் வேறு ரெயில் மூலம் லோயர் பரேல் வந்தனர். அதற்குள் ரெயில்வே போலீசார் படுகாயமடைந்த 2 பேரையும் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு 2 பேரையும் பரிசோதித்த டாக்டர்கள் அவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறினர். இந்த விபத்து குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.