கிராம நிர்வாக அலுவலகத்தில் பரபரப்பு: இலவச வீடு கேட்டு மனு அளிக்க வந்தவர்கள் ‘திடீர்’ போராட்டம்

நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தில் வாடகை வீட்டில் வசிப்பவர்கள், புறம்போக்கு நிலத்தில் குடியிருப்பவர்கள் மற்றும் சொந்த வீடு இல்லாதவர்கள் தங்களுக்கு இலவச வீடு கட்டித்தர வலியுறுத்தி நாகர்கோவில் கிருஷ்ணன் கோவிலில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்துக்கு நேற்று மனு அளிக்க வந்தனர். அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க குமரி மாவட்ட குழு உறுப்பினர் வாசுகி தலைமையில் இவர்கள் வந்திருந்தனர். கிராம நிர்வாக அலுவலகத்தில் திடீரென ஏராளமான ஆண்களும், பெண்களும் குவிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றிய தகவல் அறிந்த வடசேரி போலீசார் அங்கு சென்று கூட்டத்தை கட்டுப்படுத்தினர். அப்போது போலீசாருக்கும், மனு அளிக்க வந்தவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்தவர்கள் தாங்கள் கொண்டு வந்த மனுவை உயர்த்திப்பிடித்து கொண்டு திடீர் போராட்டம் நடத்தினர். பின்னர் போலீசார் அவர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதைத் தொடர்ந்து அனைவரும் மனு அளித்துவிட்டு கலைந்து சென்றனர்.

Related Tags :
Next Story