வெளிநாட்டில் வேலைவாங்கி தருவதாக கூறி 10 பேரிடம் ரூ.63 லட்சம் மோசடி செய்த தம்பதி கைது
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி 10 பேரிடம் ரூ.63 லட்சம் மோசடி செய்த தம்பதியை போலீசார் கைது செய்தனர்.
மும்பை,
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி 10 பேரிடம் ரூ.63 லட்சம் மோசடி செய்த தம்பதியை போலீசார் கைது செய்தனர். இதில் தொடர்புடைய 2 பேரை பிடிக்க விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெளிநாட்டில் வேலைபால்கர் மாவட்டம் சட்பாட்டி பகுதியை சேர்ந்த ஒருவருக்கு காந்திவிலியை சேர்ந்த மான்சி மேத்தா என்ற பெண்ணின் அறிமுகம் கிடைத்தது. இதில் மான்சி மேத்தா தான் தீவிரவாத தடுப்புப்படையில் போலீசாக இருப்பதாகவும், தனது கணவர் சோயிப் நசீர் வெளிநாட்டில் வேலைவாய்ப்பு வாங்கி தரும் அலுவலகம் நடத்தி வருவதாகவும் தெரிவித்தார். இதனை நம்பிய அந்த நபர் தனக்கு வெளிநாட்டில் வேலை வாங்கி தரும்படி கேட்டு உள்ளார். இதற்காக அவரிடம் இருந்து மான்சி மேத்தா குறிப்பிட்ட தொகையை வாங்கி உள்ளார். ஆனால் அவர் கூறியபடி வெளிநாட்டில் வேலை வாங்கி கொடுக்கவில்லை. இதையடுத்து அந்த நபர் பணத்தை திருப்பி கேட்டார். இதற்காக மான்சி மேத்தா காசோலை கொடுத்தார்.
தம்பதி கைதுஅதை வங்கியில் செலுத்திய போது பணம் இல்லாமல் திரும்பி வந்தது. மேலும் மான்சி மேத்தாவை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதுபற்றி அவர் போலீசில் புகார் அளித்தார். இதன்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் மான்சி மேத்தா போலீஸ் இல்லை என்பது தெரியவந்தது. அவரும், அவரது கணவரும் சேர்ந்து 10 பேரிடம் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.63 லட்சத்து 15 ஆயிரம் மோசடி செய்து இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் நேற்று முன்தினம் காந்திவிலியில் பதுங்கி இருந்த தம்பதி 2 பேரையும் கைது செய்தனர். விசாரணையின் போது, இந்த மோசடியில் பாவேஷ், பரத் ஆகிய மேலும் இருவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. போலீசார் அவர்களையும் வலைவீசி தேடி வருகின்றனர்.