கல்லிடைக்குறிச்சி அருகே தொழிலாளி கொலை: அண்ணன்–தம்பியை பிடிக்க தனிப்படை அமைப்பு


கல்லிடைக்குறிச்சி அருகே தொழிலாளி கொலை: அண்ணன்–தம்பியை பிடிக்க தனிப்படை அமைப்பு
x
தினத்தந்தி 4 Aug 2017 2:30 AM IST (Updated: 3 Aug 2017 11:40 PM IST)
t-max-icont-min-icon

கல்லிடைக்குறிச்சி அருகே தொழிலாளி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் அண்ணன்–தம்பியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.

அம்பை,

கல்லிடைக்குறிச்சி அருகே தொழிலாளி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் அண்ணன்–தம்பியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.

தொழிலாளி கொலை

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள செங்குளத்தை சேர்ந்தவர் சக்திவேல் முருகன் (வயது 31) கட்டிட தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் வேலையை முடித்து விட்டு வரும் போது, வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து கல்லிடைக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில், கடந்த ஆண்டு தெற்கு வீரவநல்லூர் பஞ்சாயத்து தலைவர் ரவிச்சந்திரன் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் தொடர்புடைய செங்குளத்தை சேர்ந்த கண்ணன் மகன் விகாஷ் (27) என்பவரின் வீட்டை ரவிச்சந்திரனின் ஆதரவாளரான சக்திவேல் முருகன் உள்ளிட்ட சிலர் கற்களை வீசி தாக்குதல் நடத்தினார்கள். இதனால் சக்திவேல் முருகன், விகாஷ் ஆகியோருக்கு இடையே முன்விரோதம் இருந்தது. இதையடுத்து அவரை கொலை செய்ய விகாஷ், அவருடைய தம்பி விஜய் (21) ஆகியோர் திட்டமிட்டனர்.

அதன்படி நேற்று முன்தினம் வேலை முடித்து விட்டு சக்திவேல் முருகன் கல்லிடைக்குறிச்சி அருகே பொட்டல் பகுதியில் வந்த போது, விகாஷ், விஜய் ஆகியோர் சேர்ந்து வெட்டிக் கொலை செய்தது தெரியவந்தது.

தனிப்படை அமைப்பு

இதையடுத்து அண்ணன்–தம்பியை பிடிக்க போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர்கள் பிரதாப், சிவதாணு ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த தனிப்படை போலீசார் தலைமறைவாக உள்ள விகாஷ், விஜய் ஆகியோரை வலைவீசி தேடிவருகிறார்கள்.


Next Story