மும்பை பல்கலைக்கழக தேர்வு முடிவு வெளியாவதில் காலதாமதம் விசாரணை நடத்தப்படும் என பட்னாவிஸ் அறிவிப்பு


மும்பை பல்கலைக்கழக தேர்வு முடிவு வெளியாவதில் காலதாமதம் விசாரணை நடத்தப்படும் என பட்னாவிஸ் அறிவிப்பு
x
தினத்தந்தி 4 Aug 2017 3:00 AM IST (Updated: 4 Aug 2017 2:47 AM IST)
t-max-icont-min-icon

மும்பை பல்கலைக்கழக தேர்வு முடியாவதில் தொடர்ந்து காலதாமதம் ஏற்படுவதால், இதுபற்றி விசாரணை நடத்தப்படும் என முதல்–மந்திரி தெரிவித்தார்.

மும்பை,

மும்பை பல்கலைக்கழக தேர்வு முடியாவதில் தொடர்ந்து காலதாமதம் ஏற்படுவதால், இதுபற்றி விசாரணை நடத்தப்படும் என முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.

கால தாமதம்

மும்பை பல்கலைக்கழகத்தில் விடைத்தாள்கள் முதன்முறையாக ஆன்லைனில் திருத்தப்படுவதால், குளறுபடி ஏற்பட்டு தேர்வு முடிவு வெளியாவதில் தாமதம் ஏற்படுகிறது. இந்த பிரச்சினையை நேற்று மராட்டிய மேல்–சபையில் தேசியவாத காங்கிரஸ் உறுப்பினர் சுனில் தத்காரே எழுப்பினார்.

தேர்வு முடிவு வெளியாவதில் ஏற்படும் தாமதத்துக்கும், குளறுபடிக்கும் பல்கலைக்கழக துணைவேந்தர் சஞ்சய் தேஷ்முக்கின் அறியாமை தான் காரணம் என்று கூறிய சுனில் தத்காரே, அவரை உடனடியாக பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

காங்கிரஸ் உறுப்பினர் சஞ்சய் தத் பேசும்போது, ‘‘இந்த விவகாரத்தில் சஞ்சய் தேஷ்முக்கை காங்கிரஸ் பிரதிநிதிகள் சந்தித்து பேசியபோது, வருகிற 16–ந் தேதிக்கு முன்பாக நிலுவையில் உள்ள அனைத்து முடிவுகளையும் வெளியிட முடியாது என்று அவர் கூறினார்’’ என்றார்.

விசாரணை

அதேசமயம், தேர்வு முடிவு 5–ந் தேதிக்குள் (அதாவது இன்று) வெளியாகிவிடும் என்று முதல்–மந்திரியும், கல்வித்துறை மந்திரியும் ஏற்கனவே உறுதியளித்ததை நினைவுகூர்ந்த அவர், சஞ்சய் தேஷ்முக் முதல்–மந்திரியையும், கல்வித்துறை மந்திரியையும் தவறாக வழிநடத்திவிட்டதாக குற்றம்சாட்டினார்.

இதற்கு முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பதில் அளிக்கையில், ‘‘ஒவ்வொரு நாளும் தேர்வு முடிவு வெளியாகி கொண்டு தான் இருக்கிறது. இருப்பினும், இன்றைக்கு எனக்கு கொடுக்கப்பட்ட தகவல் புதியது. இதுபற்றி விசாரணை நடத்துவேன்’’ என்றார்.

அத்துடன், துணைவேந்தரை நியமிக்கும் அதிகாரம் கவர்னரிடமே இருப்பதால், யார் தவறு செய்தாலும் அவர் கடுமையான நடவடிக்கை எடுப்பார் என்றும் முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் எச்சரித்தார்.


Next Story