நாளை பராமரிப்பு பணி மின்சார ரெயில் போக்குவரத்தில் மாற்றம்


நாளை பராமரிப்பு பணி மின்சார ரெயில் போக்குவரத்தில் மாற்றம்
x
தினத்தந்தி 5 Aug 2017 3:45 AM IST (Updated: 5 Aug 2017 3:30 AM IST)
t-max-icont-min-icon

பராமரிப்பு பணி காரணமாக நாளை மத்திய மற்றும் மேற்கு ரெயில்வே வழித்தடங்களில் மின்சார ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

மும்பை,

பராமரிப்பு பணி காரணமாக நாளை மத்திய மற்றும் மேற்கு ரெயில்வே வழித்தடங்களில் மின்சார ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

பராமரிப்பு பணி

மத்திய ரெயில்வேயின் மெயின் வழித்தடத்தில் உள்ள முல்லுண்டு– மாட்டுங்கா இடையே விரைவு வழித்தடத்தில் நாளை(ஞாயிற்றுக்கிழமை) காலை 11.20 மணிமுதல் மாலை 4.20 மணி வரை பராமரிப்பு பணி நடக்கிறது.

இதன் காரணமாக சி.எஸ்.டி. நோக்கி வரும் விரைவு மின்சார ரெயில்கள் காலை 10.59 மணி முதல் மாலை 4.20 மணி வரை முல்லுண்டு– பரேல் ரெயில் நிலையங்களுக்கு இடையே ஸ்லோ வழித்தடத்தில் திருப்பி விடப்படும்.

இந்த ரெயில்கள் பரேல்– சி.எஸ்.டி. இடையே பைகுல்லாவில் மட்டும் நிற்கும்.

ரெயில்கள் ரத்து

சி.எஸ்.டி.யில் இருந்து செல்லும் விரைவு மின்சார ரெயில்கள் காலை 10.08 மணி முதல் பிற்பகல் 2.42 மணி வரை காட்கோபர், விக்ரோலி, பாண்டுப், முல்லுண்டு மற்றும் வழக்கமான ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். துறைமுக வழித்தடத்தில் பன்வெல்– நெருல் இடையே இருமார்க்கத்திலும் காலை 11.20 மணி முதல் மாலை 4.20 மணி வரை பராமரிப்பு பணி நடக்கிறது.

இந்த நேரத்தில் பேலாப்பூரில் இருந்து சி.எஸ்.டி. வரும் ரெயில்கள் காலை 11.14 மணி முதல் மாலை 4.15 மணி வரையும், நெருலில் இருந்து வாஷி, பேலாப்பூர், பன்வெல் செல்லும் ரெயில்கள் காலை 11.01 மணி முதல் மாலை 4.26 மணி வரையும் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

மேற்கு ரெயில்வே

டிரான்ஸ்ஹார்பர் வழித்தடத்தில் பன்வெலில் இருந்து தானே செல்லும் ரெயில்கள் காலை 11.04 மணி முதல் பிற்பகல் 3.53 வரையும், தானேயில் இருந்து பன்வெல் செல்லும் ரெயில்கள் நெருலில் இருந்து காலை 11.42 மணி முதல் மாலை 4.04 மணி வரையும் ரத்து செய்யப்பட்டன.

பராமரிப்பு பணியின் போது பன்வெல்– அந்தேரி இடையேயும் ரெயில் சேவை இருக்காது.

இருப்பினும் பராமரிப்பு பணியின் போது சி.எஸ்.டி.– நெருல் இடையேயும், தானே– நெருல் இடையேயும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும்.

மேற்கு ரெயில்வே வழித்தடத்தில் சர்ச்கேட்– மும்பை சென்டிரல் இடையே காலை 10.35 மணி முதல் பிற்பகல் 15.35 மணி வரை ஸ்லோ வழித்தடத்தின் இருமார்க்கத்திலும் பராமரிப்பு பணி நடக்கிறது. இதன் காரணமாக இவ்விரு ரெயில் நிலையங்களுக்கிடையே ஸ்லோ ரெயில்கள் விரைவு வழித்தடத்தில் திருப்பி விடப்படும். மேலும் சில ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

இந்த தகவல் மத்திய மற்றும் மேற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story