தஞ்சையில் 3–வது நாளாக முதுகலை மருத்துவ மாணவர்கள் வேலைநிறுத்தம்


தஞ்சையில் 3–வது நாளாக முதுகலை மருத்துவ மாணவர்கள் வேலைநிறுத்தம்
x
தினத்தந்தி 6 Aug 2017 4:15 AM IST (Updated: 5 Aug 2017 11:17 PM IST)
t-max-icont-min-icon

தஞ்சையில் 3–வது நாளாக முதுகலை மருத்துவ மாணவர்கள் வேலைநிறுத்தம்

தஞ்சாவூர்,

தஞ்சை மருத்துவகல்லூரியில் முதுகலை மருத்துவ மாணவர்கள் 150 பேர் பயின்று வருகிறார்கள். மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு வரும் புறநோயாளிகளுக்கு பெரும்பாலும் இவர்கள் தான் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த நிலையில் முதுகலை மருத்துவ படிப்பு மாணவர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை கடந்த மே, ஜூன், ஜூலை ஆகிய 3 மாதம் வழங்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் முதுகலை மருத்துவ மாணவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று இந்த போராட்டம் 3–வது நாளாக நீடித்தது. பின்னர் வேலைநிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் முதல்வர் அறை எதிரே அமர்ந்து கோ‌ஷங்கள் எழுப்பினர். மாணவர்களின் இந்த போராட்டத்தால் மருத்துவமனைக்கு வந்த புறநோயாளிகள் பெரிதும் அவதிப்பட்டனர்.


Next Story