மதுபானக்கடையில் ஊழியர்களிடம் அரிவாளை காட்டி மிரட்டி ரூ.3 லட்சத்து 12 ஆயிரம் கொள்ளை
சின்னதாராபுரம் அருகே மதுபானக்கடையில் ஊழியர்களிடம் அரிவாளை காட்டி மிரட்டி ரூ.3 லட்சத்து 12 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
க.பரமத்தி,
சின்னதாராபுரம் அருகே உள்ள மலச்சூரில் மதுபானக்கடை உள்ளது. இந்த கடையில் சின்னதாராபுரம் அருகே உள்ள தொக்குப் பட்டிபுதூரை சேர்ந்த கணேசன்(வயது 43) என்பவர் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். இதேபோல் விஸ்வநாதபுரியை சேர்ந்த தண்டபாணி(42), ரங்கபாளையத்தை சேர்ந்த மணிகண்டன்(37) ஆகியோர் விற்பனையாளர்களாக வேலை பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் 3 பேரும் பணியில் ஈடுபட்டு இருந்தபோது இரவு 9.30 மணி அளவில் 2 மோட்டார் சைக்கிள் களில் 3 மர்ம நபர்கள் வந்தனர். பின்னர் அவர்கள் மதுபானக்கடையின் அருகே மோட்டார் சைக்கிள்களை நிறுத்திவிட்டு, கையில் அரிவாளுடன் மதுபானக்கடையை நோக்கி வந்தனர். இதனை பார்த்த மதுவாங்க நின்று கொண்டு இருந்தவர்கள் அலறியடித்துக்கொண்டு ஓடினர்.
பின்னர் ஒருவர் மட்டும் அரிவாளுடன் மதுபானக்கடையின் வெளியே நின்று கொண்டார். மற்ற 2 பேரும் மதுபானக்கடையின் உள்ளே சென்று மேற்பார்வையாளர் கணேசன், விற்பனையாளர்கள் தண்டபாணி, மணிகண்டன் ஆகியோரை மிரட்டி கடையில் இருந்த ரூ.3 லட்சத்து 12 ஆயிரத்தை கொள்ளையடித்து கொண்டு தப்பி சென்றனர். இதனை பார்த்த அப்பகுதியை சேர்ந்த சிலர், மர்மநபர்கள் 3 பேரையும் பிடிக்க மோட்டார் சைக்கிள்களில் பின்தொடர்ந்து சென்றனர். ஆனால் முடியவில்லை. பின்னர் இதுகுறித்து கணேசன் சின்னதாராபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் கூடுதல் போலீஸ் துணை சூப்பிரண்டு ஜெயச்சந்திரன், சின்னதாராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயமோகன், சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருத்திகா ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர் வரவழைக்கப்பட்டு விரல் ரேகைகள் சேகரிக்கப்பட்டன. பின்னர் இதுகுறித்து சின்னதாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Tags :
Next Story