மும்பை போலீசாரிடம் ரூ.45 லட்சம் மோசடி பீகார் முன்னாள் எம்.எல்.ஏ.வின் பெண் செயலாளர் கைது


மும்பை போலீசாரிடம் ரூ.45 லட்சம் மோசடி பீகார் முன்னாள் எம்.எல்.ஏ.வின் பெண் செயலாளர் கைது
x
தினத்தந்தி 7 Aug 2017 3:47 AM IST (Updated: 7 Aug 2017 3:46 AM IST)
t-max-icont-min-icon

மும்பை போலீசாரிடம் ரூ.45 லட்சம் மோசடி செய்ததாக பீகார் முன்னாள் எம்.எல்.ஏ.வின் பெண் செயலாளர் கைது செய்யப்பட்டுள்ளார். வீடு வாங்கி தருவதாக... மும்பை போலீஸ் சிறப்பு பிரிவு படையில் உதவி இன்ஸ்பெக்டராக இருப்பவர் சூரியகாந்த் சால்வி. இவர் கடந்த ஜனவரி மாதம் ஜூக

மும்பை,

மும்பை போலீசாரிடம் ரூ.45 லட்சம் மோசடி செய்ததாக பீகார் முன்னாள் எம்.எல்.ஏ.வின் பெண் செயலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வீடு வாங்கி தருவதாக...

மும்பை போலீஸ் சிறப்பு பிரிவு படையில் உதவி இன்ஸ்பெக்டராக இருப்பவர் சூரியகாந்த் சால்வி. இவர் கடந்த ஜனவரி மாதம் ஜூகு போலீசில் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில், பீகாரை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. ஒருவரின் பெண் செயலாளர் அன்ஜூ அல்மெய்டா (வயது 35) அந்தேரி பகுதியில் குடிசைபுனரமைப்பு திட்டத்தின் கீழ் கட்டப்படும் குடியிருப்பில் குறைந்தவிலையில் வீடு வாங்கி தருவதாக கூறி பணம் மோசடி செய்து விட்டதாக கூறியிருந்தார்.

பெண் செயலாளர் கைது

போலீசார் புகார் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் பீகார் முன்னாள் எம்.எல்.ஏ.வின் செயலாளர் அன்ஜூ அல்மெய்டா, உதவி இன்ஸ்பெக்டர் உள்பட 5 மும்பை போலீசாரிடம் குறைந்தவிலையில் வீடுகள் வாங்கி தருவதாக கூறி ரூ.45 லட்சம் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. எனவே மும்பை போலீசார் அவரை தேடி வந்தனர். இந்தநிலையில் அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.


Next Story