கஞ்சா புகைப்பதில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் கொலை 2 பேர் கைது


கஞ்சா புகைப்பதில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் கொலை 2 பேர் கைது
x
தினத்தந்தி 8 Aug 2017 4:15 AM IST (Updated: 8 Aug 2017 12:39 AM IST)
t-max-icont-min-icon

துரைப்பாக்கம் கண்ணகி நகரில் கஞ்சா புகைப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் வாலிபர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஆலந்தூர்,

சென்னையை அடுத்த துரைப்பாக்கம் கண்ணகி நகர் 47–வது தெருவை சேர்ந்தவர் தினேஷ் (வயது 19). இவர் வேலைக்கு செல்லாமல் அப்பகுதியில் உள்ளவர்களுடன் சேர்ந்து கஞ்சா அடிப்பது, மது அருந்துவது என சுற்றிக் கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. தினேஷுக்கும் அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் (20) என்பவருக்கும் இடையே கஞ்சா புகைப்பது தொடர்பாக தகராறு இருந்து வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் கண்ணகி நகர் 11–வது பிரதான சாலையில் வைத்து நேற்று மீண்டும் அவர்களுக்குள் கஞ்சா புகைப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த மணிகண்டன் தனது நண்பர்களுடன் சேர்ந்து தினேசை தாக்கினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஒடிவந்தனர். பொதுமக்கள் வருவதை கண்டதும் மணிகண்டன் மற்றும் அவரது நண்பர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

இந்த சம்பவத்தில் தினேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கண்ணகிநகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த போலீசார் தினேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது பற்றி வழக்கு பதிவு செய்து, தினேசை கொலை செய்ததாக மணிகண்டன் மற்றும் பிரபாகரன் (20) ஆகியோரை கைது செய்தனர். மேலும் 2 பேரை தேடி வருகின்றனர். கண்ணகி நகரில் நடந்த இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story