கியாஸ் மானியத்தை ரத்து செய்ததற்கு கண்டனம்: மகிளா காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம்


கியாஸ் மானியத்தை ரத்து செய்ததற்கு கண்டனம்: மகிளா காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 8 Aug 2017 4:30 AM IST (Updated: 8 Aug 2017 2:16 AM IST)
t-max-icont-min-icon

கியாஸ் சிலிண்டர் மானியம் ரத்து செய்யப்பட்டதை கண்டித்து மகிளா காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்ட மகிளா காங்கிரஸ் சார்பில் திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கியாஸ் சிலிண்டர் மானியம் ரத்து செய்யப்பட்டதை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மகிளா காங்கிரஸ் மாநில தலைவி ஜான்சிராணி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார்.

அப்போது, ‘மத்திய அரசு கியாஸ் சிலிண்டருக்கான மானியத்தை ரத்து செய்து இருப்பது கண்டிக்கத்தக்கது. அதை உடனடியாக வாபஸ் பெற வேண்டும். மேலும், வழக்கம் போல ரே‌ஷன் பொருட்களை வழங்க வேண்டும். குஜராத்தில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தி கார் மீது கல்வீசப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறேன். சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன. இதில், திண்டுக்கல் மாநகர் மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி ரோஜாபேகம், கிழக்கு மாவட்ட தலைவி நாகலட்சுமி, மேற்கு மாவட்ட தலைவி ராஜம்மாள், முன்னாள் சிறுபான்மை பிரிவு தலைவர் முகமதுசித்திக் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.


Next Story