இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 8 Aug 2017 4:30 AM IST (Updated: 8 Aug 2017 2:34 AM IST)
t-max-icont-min-icon

திருத்துறைப்பூண்டியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருத்துறைப்பூண்டி,

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் திருத்துறைப்பூண்டி கொருக்கை ரேஷன் கடை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்க ஒன்றியச்செயலாளர் ஏ.கே.வேலவன் தலைமை தாங்கினார். தமிழ் மாநில செயலாளர் எஸ்.பாலா, மாவட்ட தலைவர் கே.ஜி.ரகுராமன், செயலாளர் கே.பி.ஜோதிபாசு, பொருளாளர் கே.எஸ்.செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கியாஸ் மானியத்தை ரத்து செய்யும் திட்டத்தை கைவிட வேண்டும். தவணை முறையில் குளிர்சாதனப்பெட்டி வாங்கும் விவசாயிகளுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கவேண்டும். கூட்டு குடும்பத்திற்கு கூடுதலான அறை கட்டினாலும் ரேஷன் பொருட்கள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதில் ஒன்றிய தலைவர் மணிகண்டன், மாவட்ட துணை தலைவர் ஸ்டாலின், மாவட்ட துணைச்செயலாளர் கே.எஸ்.கோசிமணி, நகரச்செயலாளர் சிவசாகர், ஒன்றிய பொருளாளர் பிரசாத், ஒன்றிய துணைதலைவர் பார்த்தீபன் மற்றும் பொதுமக்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 

Next Story