பொதுப்பணித்துறை அலுவலகத்தை தி.மு.க.வினர் முற்றுகை கடைவரம்பு பகுதி வரை தண்ணீர் விட வலியுறுத்தல்
கடைவரம்பு பகுதிவரை தண்ணீர் விட வலியுறுத்தி மயிலாடி பொதுப்பணித்துறை அலுவலகத்தை தி.மு.க.வினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
அஞ்சுகிராமம்,
குமரி மாவட்டத்தில் பாசனத்திற்காக பேச்சிப்பாறை அணையில் இருந்து கடந்த மாதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் முதல் கட்டமாக தோவாளை, அனந்தனாறு மற்றும் பழையாறு கால்வாய்களில் விடப்பட்டது. ஆனால், நாஞ்சில் நாடு புத்தனார் கால்வாய்களில் இன்னும் தண்ணீர் விடவில்லை என்றும், இதனால் கடை வரம்பு பகுதிகளான மயிலாடி, அழகப்பபுரம், அஞ்சுகிராமம் பகுதிகளில் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
மேலும், கடைவரம்பு பகுதி விவசாயிகள் தங்கள் பகுதிக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று காலை மயிலாடியில் உள்ள பொதுப்பணித்துறை நீர்பாசன பிரிவு அலுவலகம் முன் ஆஸ்டின் எம்.எல்.ஏ தலைமையில் தி.மு.க.வினர் திடீர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டார்.
அப்போது, அவர்கள் அஞ்சுகிராமம், அழகப்பபுரம் மற்றும் மயிலாடி பகுதி விவசாயிகள் நலன் காக்க கடைவரம்பு பகுதிவரை தண்ணீர் திறந்து விட வேண்டும் என வலியுறுத்தினர். போராட்டத்தில் மயிலாடி பேரூராட்சி முன்னாள் தலைவர் சாய்ராம், ஒன்றிய தி.மு.க. செயலாளர்கள் தாமரை பாரதி, மதியழகன் மற்றும் நிர்வாகிகள் ஆர்.எஸ்.பார்த்தசாரதி, ஜோசப் சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதையடுத்து அங்கு அஞ்சுகிராமம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ஜெயந்தி தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர்.
போராட்டம் நடத்தியவர்களிடம், உதவி செயற்பொறியாளர் வசந்தி மற்றும் அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, கடைவரம்பு பகுதிக்கு தண்ணீர் வர உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story