இளம் விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் மரபணு விதைக்கு தடை கோரி ஆர்ப்பாட்டம்


இளம் விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் மரபணு விதைக்கு தடை கோரி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 10 Aug 2017 3:45 AM IST (Updated: 10 Aug 2017 12:20 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே இளம் விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் மரபணு விதைக்கு தடை கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.

திண்டுக்கல்,

அகில இந்திய இளம் விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில், திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாநில ஒருங்கிணைப்பாளர் பிரியன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் நேதாஜி, செயலாளர் அரவிந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய அரசை கண்டித்து கோ‌ஷங்களை எழுப்பினர். மேலும் மரபணு மாற்றப்பட்ட விதைகளை தடை செய்ய வேண்டும், மரபணு மாற்ற விதைகளை உற்பத்தி செய்யும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன.


Next Story