ராகுல்காந்தி கார் மீது கல்வீச்சு: ஊட்டியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


ராகுல்காந்தி கார் மீது கல்வீச்சு: ஊட்டியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 10 Aug 2017 3:15 AM IST (Updated: 10 Aug 2017 2:13 AM IST)
t-max-icont-min-icon

குஜராத்தில் காங்கிரஸ் கட்சி துணை தலைவர் ராகுல்காந்தியின் கார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்து மாவட்ட காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஊட்டி,

குஜராத்தில் காங்கிரஸ் கட்சி துணை தலைவர் ராகுல்காந்தியின் கார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்து ஊட்டி ஏ.டி.சி. திடலில் நேற்று மாவட்ட காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவரும், ஊட்டி எம்.எல்.ஏ.வுமான கணேஷ் தலைமை தாங்கினார். ராகுல்காந்தியின் கார் மீது கல்வீசியதை கண்டித்தும், பா.ஜனதாவின் ஜனநாயக விரோதப்போக்கை கண்டித்தும் கோ‌ஷம் எழுப்பப்பட்டது. இதில் மாநில செயற்குழு உறுப்பினர் சுப்பிரமணியம், கட்சி நிர்வாகிகள் அழகேசன், ரவிக்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story