ஆஸ்பத்திரியில் இருந்து நடிகர் திலீப்குமார் வீடு திரும்பினார்


ஆஸ்பத்திரியில் இருந்து நடிகர் திலீப்குமார் வீடு திரும்பினார்
x

பழம்பெரும் இந்தி நடிகர் திலீப்குமார் சிறுநீரக கோளாறு காரணமாக கடந்த வாரம் மும்பை பாந்திராவில் உள்ள லீலாவதி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

மும்பை,

பழம்பெரும் இந்தி நடிகர் திலீப்குமார் சிறுநீரக கோளாறு காரணமாக கடந்த வாரம் மும்பை பாந்திராவில் உள்ள லீலாவதி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் அவரை தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்து சிகிச்சை அளித்து வந்தனர். அவரது மனைவி சாய்ரா பானு உடனிருந்து கவனித்து வந்தார். இதைத்தொடர்ந்து, 94 வயது நடிகர் திலீப்குமாரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது.

இதன் காரணமாக நேற்று மாலை 4 மணியளவில் அவர் ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அதன்படி, ஆஸ்பத்திரியில் இருந்து சக்கர நாற்காலியில் அவர் வெளியே அழைத்து வரப்பட்டார். அப்போது, அங்கு கூடியிருந்த ரசிகர்களை பார்த்து அவர் புன்முறுவல் பூத்ததுடன், மகிழ்ச்சியில் கையசைத்தபடி காரில் ஏறி வீடு திரும்பினார்.

நடிகர் திலீப்குமார் உடல்நலம் பெற வேண்டி அவருக்காக பிரார்த்தனை செய்த ரசிகர்களுக்கும், நல விரும்பிகளுக்கும் நன்றி தெரிவித்து அவரது சமூக வலைதள பக்கத்தில் சாய்ரா பானு கருத்து பதிவு செய்தார்.

Next Story