மனுநீதிநாள் முகாம்களில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடந்த மனுநீதி நாள் முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
கண்ணமங்கலம்,
கண்ணமங்கலம் அருகே உள்ள அம்மாபாளையம் கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் நேற்று நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி தலைமை தாங்கினார். அம்மாபாளையம் ஊராட்சி முன்னாள் தலைவர் கவிதாபிரகாஷ், பால் கூட்டுறவு சங்க தலைவர் சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆரணி தாசில்தார் சுப்பிரமணியன் வரவேற்றார்.
முகாமில் 55 பேருக்கு சிறு, குறு விவசாயிகள் சான்றிதழ், 2 பேருக்கு விதவை சான்றிதழ் உள்பட 151 பேருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இதில் வட்ட வழங்கல் அலுவலர் நடராஜன், மண்டல துணை தாசில்தார்கள் வெங்கடேசன், ஓம்சக்தி ஆனந்தகுமார், ஆரணி மோட்டார் வாகன ஆய்வாளர் முருகேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் கிராம நிர்வாக அலுவலர் முனிவேலு நன்றி கூறினார்.
வெம்பாக்கம் அருகே அரியூர் பனமனை கிராமத்தில் நடந்த மனுநீதி நாள் முகாமிற்கு மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ராஜஸ்ரீ தலைமை தாங்கினார். வெம்பாக்கம் தாசில்தார் பெருமாள் முன்னிலை வகித்தார். முகாமில் கல்வி உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை என பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 204 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 167 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.
முகாமில் ரூ.3 லட்சத்து 45 ஆயிரத்து 500 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. வேளாண்மை துறை சார்பில் தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டன. வட்டார மருத்துவ அலுவலர் கிருஷ்ணகுமார், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் அற்புதம், மண்டல துணை தாசில்தார் துளசிராமன், வட்ட வழங்கல் அலுவலர் பொன்னுசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
செங்கம் அருகே பாய்ச்சல் கிராமத்தில் மனுநீதிநாள் முகாம் நடந்தது. மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை அலுவலர் பானு தலைமை தாங்கினார். செங்கம் தாசில்தார் உதயகுமார், வருவாய் ஆய்வாளர் தமிழரசி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் சிறு, குறு விவசாய சான்று, பட்டா மாறுதல் உள்ளிட்ட நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது. பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட 205 மனுக்களில் தகுதியுடைய 140 மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள மனுக்கள் பரிசீலனையில் உள்ளது.
இதில் வேளாண்மை உதவி இயக்குனர் சிவக்குமார், கிராம நிர்வாக அலுவலர்கள் மலர், குணாநிதி, பரசுராமன், போக்குவரத்து கழக செங்கம் பணிமனை சார்பாக ராஜசேகர், அளவையர் கருணாகரன், சப்-இன்ஸ்பெக்டர் சேகர், முன்னாள் கவுன்சிலர் துரைராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
போளூரை அடுத்த களியம் கிராமத்தில் நடந்த மனுநீதி நாள் முகாமுக்கு போளூர் தாசில்தார் புவனேஸ்வரி தலைமை தாங்கினார். சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ராஜராஜேஸ்வரி முன்னிலை வகித்தார். வருவாய் ஆய்வாளர் சிவலிங்கம் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் (சிப்காட்) சாந்தி கலந்து கொண்டு 18 பேருக்கு பட்டா மாறுதல், 38 பேருக்கு சிறு, குறு விவசாய சான்று ஆகியவற்றை வழங்கினர். முகாமில் 156 மனுக்கள் பெற்றதில் 56 மனுக்கள் ஏற்கப்பட்டது. 100 மனுக்கள் பரிசீலனையில் உள்ளது.
இதில் விவசாய துறை உதவி இயக்குனர் வடமலை, நில அளவை வட்ட துணை ஆய்வாளர் சக்கரவர்த்தி, கிராம நிர்வாக அலுவலர் சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சேத்துப்பட்டு தாலுகாவில் உள்ள மடம், இசாகொளத்தூர், வயலூர் ஆகிய கிராமங்களுக்கான சிறப்பு மனுநீதிநாள் முகாம் மடம் கிராமத்தில் நடந்தது. தாசில்தார் சாந்தி, சமூக நலத்துறை தாசில்தார் தமிழ்மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நெடுங்குணம் வருவாய் ஆய்வாளர் அய்யப்பன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக செய்யாறு உதவி கலெக்டர் கிருபாகரன் கலந்து கொண்டு சிறு, குறு விவசாயிகளுக்கு சான்றிதழ், முதியோர் உதவிதொகை உள்பட 104 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். முன்னதாக அவர் டெங்கு ஒழிப்பு கண்காட்சி, ஊட்டச்சத்து கண்காட்சி, கால்நடை திட்ட கண்காட்சியை பார்வையிட்டார்.
நிகழ்ச்சியில் ஊட்டச்சத்து அலவலர் கோமதி, டாக்டர் அருண்குமார், கிராம நிர்வாக அலுவலர்கள் குமரேசன், பிரபு, சத்தீஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story