தூத்துக்குடியில் விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு இ.எஸ்.ஐ. மூலம் உதவித்தொகை
தூத்துக்குடி மாவட்ட இ.எஸ்.ஐ. நிறுவனம் சார்பில் விபத்தில் இறந்த 2 இ.எஸ்.ஐ. சந்தாதாரர்களின் குடும்பத்தினருக்கு உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி தூத்துக்குடியில் நேற்று மாலை நடந்தது.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்ட இ.எஸ்.ஐ. நிறுவனம் சார்பில் விபத்தில் இறந்த 2 இ.எஸ்.ஐ. சந்தாதாரர்களின் குடும்பத்தினருக்கு உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி தூத்துக்குடியில் நேற்று மாலை நடந்தது.
நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி இ.எஸ்.ஐ. நிறுவன கிளை மேலாளர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக நெல்லை மண்டல இ.எஸ்.ஐ. உதவி இயக்குனர் சத்தியவாசகம் கலந்து கொண்டு விபத்தில் இறந்த இ.எஸ்.ஐ. சந்தாதாரர்கள் 2 பேரின் குடும்பத்தினருக்கு நிலுவைத்தொகையை வழங்கினார்.
அதன்படி தூத்துக்குடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி விபத்தில் இறந்த அய்யப்பன் என்பவர் குடும்பத்தினருக்கு உதவித் தொகையாக ரூ.50 ஆயிரத்து 431–ம், மணிவண்ணன் என்பவர் குடும்பத்தினருக்கு நிலுவைத் தொகை ரூ.50 ஆயிரத்து 441–ம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் இ.எஸ்.ஐ. காசாளர் கந்தசாமி, இளநிலை உதவியாளர் கண்ணன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.