அரசு பஸ் டிரைவர், கண்டக்டர் மீது கல்லூரி மாணவர்கள் தாக்குதல் 2 பேர் கைது
படியில் பயணம் செய்தவர்களை மேலே ஏறி வரச்சொன்னதால் அரசு பஸ் டிரைவர், கண்டக்டர் மீது கல்லூரி மாணவர்கள் தாக்குதல் நடத்தினர். இதில் 2 மாணவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நொய்யல்,
கரூர் வெங்கமேட்டை சேர்ந்தவர் சிவக்குமார்(வயது 48). அரசு பஸ் டிரைவரான இவர் நேற்று மாலை கரூர் பஸ் நிலையத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூரை நோக்கி பஸ்சை ஓட்டிச்சென்றார். அந்த பஸ்சில் திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூரை சேர்ந்த ராஜேந்திரன்(40) கண்டக்டராக பணியாற்றினார். இந்த நிலையில் பஸ் கரூர்- பரமத்திவேலூர் நெடுஞ்சாலையில் மூலிமங்கலம் பிரிவு அருகே சென்று கொண்டு இருந்த போது கல்லூரி மாணவர்கள் சிலர் படியில் நின்று பயணம் செய்து கொண்டு இருந்தனர். அப்போது அவர்களை கண்டக்டர் ராஜேந்திரன் மேலே ஏறி வருமாறு கூறினார். இதில் ஆத்திரம் அடைந்த 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள், பஸ் கண்டக்டரை சரமாரியாக தாக்கினர். இதையடுத்து பஸ் டிரைவர் உடனே பஸ்சை நிறுத்திவிட்டு, மாணவர்களை தடுக்க முயன்றார். இதில் பஸ் டிரைவரையும் தாக்கி அவரது கழுத்தில் மாணவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் கீறினர். இதில் அவரது கழுத்தில் காயம் ஏற்பட்டது. கல்லூரி மாணவர்கள் கூட்டாக தாக்கியதால் பஸ்சில் பயணம் செய்த பயணிகள் அவர்களை தடுக்க அச்சப்பட்டனர்.
போராட்டம்
இதையடுத்து அப்பகுதி பொதுமக்கள் சம்பவ இடத்தில் கூடியதால் மாணவர்கள் தப்பியோடிவிட்டனர். இதில் 2 மாணவர்களை மட்டும் பொதுமக்கள் மடக்கி பிடித்தனர். இதையடுத்து காயம் அடைந்த டிரைவரையும், கண்டக்டரையும் மீட்டு சிகிச்சைக்காக வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த சம்பவத்தை அறிந்த அப்பகுதி வழியாக சென்ற அரசு பஸ் டிரைவர்கள் இதனை கண்டித்தும், மாணவர்களை உடனே கைது செய்யக்கோரியும் பஸ்களை சாலையிலேயே நிறுத்திவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
2 மாணவர்கள் கைது
இதுகுறித்து தகவல் அறிந்த வேலாயுதம்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிடிபட்ட மாணவர்களை கைது செய்தனர். தொடர்ந்து அரசு பஸ் டிரைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசார் கூறுகையில், அரசு பஸ் டிரைவர், கண்டக்டரை தாக்கிய மாணவர்கள் அனைவரையும் கைது செய்து அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட அரசு பஸ் டிரைவர்கள் போராட்டத்தை கைவிட்டு பஸ்சை இயக்கினர். அதன் பிறகு போக்குவரத்து சரி செய்யப்பட்டது. தொடர்ந்து கைது செய்யப்பட்ட மாணவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story