கதிராமங்கலம் போராட்டத்தில் கைதான 2 பேருக்கு நிபந்தனை ஜாமீன்
கதிராமங்கலம் போராட்டத்தில் கைதான 2 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி தஞ்சை கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.
தஞ்சாவூர்,
தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. எண்ணெய் குழாய் வெடித்து, அதில் கசிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் திருவிடைமருதூர் தாசில்தார் கணேஷ்வரன் மற்றும் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தினர் பந்தநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன்பேரில் போலீசார் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து மயிலாடுதுறை சேத்தங்குடி வடக்குதெருவை சேர்ந்த பேராசிரியர் ஜெயராமன்(வயது63) உள்பட 10 பேரை கைது செய்தனர். பின்னர் இவர்கள் கும்பகோணம் நீதித்துறை நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர். ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தினர் அளித்த புகாரின் பேரில் போடப்பட்ட வழக்கில் 10 பேருக்கும் ஜாமீன் கிடைத்துள்ளது.
இதில் தாசில்தார் அளித்த புகாரின் பேரில் போடப்பட்ட வழக்கில் 8 பேருக்கு மதுரை ஐகோர்ட்டு கிளையில் நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. கதிராமங்கலம் கருப்பட்டி தெருவை சேர்ந்த தர்மராஜன்(39), வெள்ளை பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்த ரமேஷ்(38) ஆகிய 2 பேருக்கும் ஜாமீன் கேட்டு வக்கீல் நல்லதுரை தஞ்சை மாவட்ட முதன்மை அமர்வு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி நக்கீரன் விசாரணை செய்து 2 பேருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்தார்.
மேலும் தர்மராஜன் திருச்சியில் தங்கியிருந்து நீதித்துறை நடுவர் மன்றத்தில் தினமும் கையெழுத்து போட வேண்டும் என்றும், ரமேஷ் பாபநாசம் போலீஸ் நிலையத்தில் கையெழுத்து போட வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Related Tags :
Next Story