சுகாதார விழிப்புணர்வு பிரசார வாகனம் கலெக்டர் சம்பத் தொடங்கி வைத்தார்
ஊரக வளர்ச்சி முகமை சார்பில் சுகாதார விழிப்புணர்வு பிரசார வாகனத்தை கலெக்டர் சம்பத் தொடங்கி வைத்தார்.
சேலம்,
சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி முகமை சார்பில் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு பிரசார வாகன பயணம் நேற்று தொடங்கியது. இதை மாவட்ட கலெக்டர் சம்பத் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் அருள்ஜோதி அரசன், மகளிர் திட்ட அலுவலர் ஈஸ்வரன், ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் ஆறுமுகம், உதவி இயக்குனர் (பயிற்சி) அருண், உதவி திட்ட அலுவலர்கள் கண்ணன், ரவி, சாலமோன், தெய்வசிகாமணி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) குழந்தை தெரசா மற்றும் ஊரக வளர்ச்சித் துறையின் அனைத்து நிலை அலுவலர்கள், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க களப்பணியாளர்கள் கலந்து கொண்டனர்.அதன் பின்னர் கலெக்டர் சம்பத் தெரிவித்ததாவது:-
சேலம் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் வருகிற 15-ந் தேதிவரை “திறந்தவெளி இயற்கை உபாதை கழித்தலில் இருந்து விடுதலை வாரம்” செயல்பாடுகளின் ஒரு பகுதியாக 4 விழிப்புணர்வு பிரசார வாகனங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. விழிப்புணர்வு வாகனங்களில் திறந்தவெளியில் இயற்கை உபாதை கழித்தலால் ஏற்படும் தீமைகள், குழந்தைகள் உணவுக்கு முன்னும், பின்னும் சோப்புப் பயன்படுத்தி கைகளை கழுவ வேண்டும்.
பள்ளிகளில் சுகாதார உறுதி மொழிகள் எடுத்தல், இரு உறிஞ்சு குழிகளுடன் கூடிய குறைந்த செலவில் கழிவறை எவ்வாறு கட்டப்படுகிறது என்ற விவரங்கள் அடங்கிய பதாதைகள் வைக்கப்பட்டுள்ளன. இவ்வாகனங்கள் மூலம் சேலம் மாவட்டத்தில் உள்ள 385 கிராம ஊராட்சிகளிலும் சுற்றுப்பயணம் செய்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதத்தில் பிரசாரம் செய்யப்படுகின்றன.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Tags :
Next Story