கொளத்தூரில் பாதாள சாக்கடைக்குள் தவறி விழுந்த 2 பேர் உயிருடன் மீட்பு
சென்னையை அடுத்த கொளத்தூரில் தனியாருக்கு சொந்தமான ஓட்டல் உள்ளது. இந்த ஓட்டலில் அதே பகுதியை சேர்ந்த ராஜு(வயது 35), அசன்(40) ஆகியோர் வேலை செய்து வருகின்றனர்.
செங்குன்றம்,
நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்து ஓட்டலை கழுவி விட்டனர். அந்த கழிவுநீரை பாதாள சாக்கடையில் விடுவதற்கு முயற்சி செய்தனர். ஆனால் தண்ணீர் செல்லாததால் அடைப்பு ஏற்பட்டு இருக்கலாம் என்று கருதி இருவரும் பாதாள சாக்கடை கால்வாய் மூடியை திறந்து அடைப்பை எடுக்க முயன்றனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக ராஜு, அசன் இருவரும் பாதாள சாக்கடைக்குள் தவறி விழுந்து விட்டனர். இருவரின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் 2 பேரையும் உயிருடன் மீட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுபற்றி கொளத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முனிசேகர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
Related Tags :
Next Story