சிவகங்கையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா: அமைச்சர் பாஸ்கரன் ஆலோசனை


சிவகங்கையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா: அமைச்சர் பாஸ்கரன் ஆலோசனை
x
தினத்தந்தி 12 Aug 2017 10:15 PM GMT (Updated: 12 Aug 2017 8:49 PM GMT)

சிவகங்கையில் நவம்பர் மாதம் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடத்துவது தொடர்பாக அமைச்சர் பாஸ்கரன், அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

சிவகங்கை,

தமிழகம் முழுவதும் அரசு சார்பில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் நடைபெற்று வருகிறது. சிவகங்கையில் வருகிற நவம்பர் மாதம் விழா நடைபெற உள்ளது. இதனையொட்டி நூற்றாண்டு விழா முன்னேற்பாடு குறித்து அதிகாரிகளுடன் கதர் மற்றும் கிராம தொழில் துறை அமைச்சர் பாஸ்கரன் ஆலோசனை நடத்தினர். சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்திற்கு சிவகங்கை எம்.பி. செந்தில்நாதன், கலெக்டர் மலர்விழி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த கூட்டத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை சிறப்பாக நடத்துவது குறித்தும், இதையொட்டி பல்வேறு போட்டிகள் நடத்துவது, அரசு சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்குவது, அதற்குரிய பயனாளிகள் தேர்வு செய்வது குறித்தும், புகைப்பட கண்காட்சி அமைப்பது குறித்தும் அனைத்து துறை அதிகாரிகளுடன் கலந்து ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் இளங்கோ, கோட்டாட்சியர்கள் சுந்தரமூர்த்தி, நாராயணன், சிவகங்கை போலீஸ் துணை சூப்பிரண்டு மங்களேசுவரன், சமூகநலத்துறை அலுவலர் ஜான்சி, பொது சுகாதாரத்துறை துணை இயக்குனர் யசோதாமணி உள்ளிட்ட அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதனைத்தொடர்ந்து, சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி அருகில் நூற்றாண்டு விழா நடைபெறுவதற்காக தேர்வு செய்யப்பட்ட இடத்தை அமைச்சர் பாஸ்கரன், செந்தில்நாதன் எம்.பி., கலெக்டர் மலர்விழி ஆகியோர் பார்வையிட்டனர்.


Next Story