விருதுநகர் அருகே கல்லூரி மாணவிக்கு கத்திக்குத்து வாலிபர் கைது


விருதுநகர் அருகே கல்லூரி மாணவிக்கு கத்திக்குத்து வாலிபர் கைது
x
தினத்தந்தி 13 Aug 2017 4:00 AM IST (Updated: 13 Aug 2017 2:33 AM IST)
t-max-icont-min-icon

சாத்தூர் அருகே உள்ள நடுவப்பட்டியில் தனியார் ஆசிரியர் பயிற்சி கல்லூரி உள்ளது.

விருதுநகர்,

சாத்தூர் அருகே உள்ள நடுவப்பட்டியில் தனியார் ஆசிரியர் பயிற்சி கல்லூரி உள்ளது. இங்கு சாத்தூரை சேர்ந்த ஒரு மாணவி 2–ம் ஆண்டு படித்து வந்தார். இவர் முன்பு மதுரை உசிலம்பட்டி அருகே உள்ள பூதிபுரத்தில் குடும்பத்தினரோடு வசித்து வந்தார். அதன் பிறகு சாத்தூர் வந்து விட்ட மாணவிக்கு சமீபத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இந்த நிலையில் கல்லூரி முடிந்து வீட்டிற்கு செல்ல பஸ் நிறுத்தத்திற்கு வந்தார். அப்போது அங்கு வந்த பூதிபுரத்தைச் சேர்ந்த சின்னதம்பி(வயது27) என்பவர் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாணவியை குத்தி விட்டு ஓடினார். கையில் காயமடைந்த மாணவி சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து வச்சக்காரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து சின்னதம்பியை கைது செய்தனர். அந்த வாலிபர் எதற்காக மாணவியை கத்தியால் குத்தினார் என தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Next Story