கல்லூரிகளுக்கு இடையே மாநில அளவிலான ஆக்கி போட்டி 16 அணிகள் கலந்து கொண்டன


கல்லூரிகளுக்கு இடையே மாநில அளவிலான ஆக்கி போட்டி 16 அணிகள் கலந்து கொண்டன
x
தினத்தந்தி 13 Aug 2017 4:30 AM IST (Updated: 13 Aug 2017 2:37 AM IST)
t-max-icont-min-icon

ராசிபுரத்தில் கல்லூரிகளுக்கு இடையேயான மாநில அளவிலான ஆக்கி போட்டி நடந்தது. இதில் 16 அணிகள் கலந்து கொண்டன.

ராசிபுரம்,

மாநில அளவில் கல்லூரிகளுக்கு இடையேயான ஆக்கி போட்டிகள் ராசிபுரத்தில் திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரி மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய 2 இடங்களில் நேற்று நடந்தது. இதில் 16 அணிகள் கலந்து கொண்டு விளையாடின. அரசு கலைக்கல்லூரியில் நடந்த இந்த போட்டியை கல்லூரியின் முன்னாள் முதல்வர் கணேசன், ஆக்கி யூனிட் ஆப் நாமக்கல் அமைப்பின் தலைவர் நடராஜன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். செயலாளர் ஜான்ஸ்டீபன், இணைச்செயலாளர் பாண்டி நாகராசு மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

ராசிபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த போட்டியை தலைமை ஆசிரியர் மாதேஸ்வரன் தொடங்கி வைத்தார். நாக்–அவுட் முறையில் இந்த போட்டி நடந்தது. திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் நடந்த முதல் கால் இறுதிப்போட்டியில் சென்னை நாசரேத் அணி வெற்றி பெற்றது. 2–வது கால் இறுதிப்போட்டியில் தர்மபுரி டான்பாஸ்கோ கல்லூரி அணி வெற்றி பெற்றது.

இதேபோல் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த முதல் கால் இறுதிப்போட்டியில் திருச்சி ஜமால் முகமது கல்லூரி அணி வெற்றி பெற்றது. 2–வது கால் இறுதிப்போட்டியில் சென்னை செயிண்ட் ஜோசப் கல்லூரி அணி வென்றது. கால் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற அணிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலையில் நடக்கும் அரை இறுதிப்போட்டியில் கலந்து கொண்டு விளையாடுகின்றன.

போட்டிக்கான ஏற்பாடுகளை திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரி முன்னாள் மாணவர்கள், ஆக்கி யூனிட் ஆப் நாமக்கல் அமைப்பின் நிர்வாகிகள் செய்திருந்தனர். போட்டியை பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் பார்த்து ரசித்தனர்.


Next Story