சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆயுதப்படை மைதானத்தில் போலீசார் அணிவகுப்பு ஒத்திகை


சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆயுதப்படை மைதானத்தில் போலீசார் அணிவகுப்பு ஒத்திகை
x
தினத்தந்தி 13 Aug 2017 4:30 AM IST (Updated: 13 Aug 2017 2:42 AM IST)
t-max-icont-min-icon

சுதந்திர தினத்தை முன்னிட்டு நாகர்கோவிலில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் நேற்று போலீசார் அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.

நாகர்கோவில்,

71–வது சுதந்திர தினம் நாளை மறுநாள்(செவ்வாய்க்கிழமை) நாடு முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அதன்படி, குமரி மாவட்டத்திலும் சுதந்திர தின நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் வேகமாக நடந்து வருகின்றன.

 நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெறும் சுதந்திர தின நிகழ்ச்சிக்கு குமரி மாவட்ட கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் தலைமை தாங்கி தேசியக்கொடியை ஏற்றிவைக்கிறார். பின்னர் மாவட்ட காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார். பிறகு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றுகிறார். இதையடுத்து பள்ளி மாணவ–மாணவி களுக்கு கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தர்மராஜன் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொள்கிறார்கள்.

சுதந்திர தினத்தையொட்டி  அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருப்பதற்காக குமரி மாவட்டம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பஸ்நிலையங்கள், முக்கிய சந்திப்புகள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், தங்கும் விடுதிகள், ரெயில் நிலையம், கடலோர பகுதிகள், மாநில எல்லை பகுதி போன்ற இடங்களில் கூடுதல் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.மேலும், சோதனை சாவடிகளில் வாகன சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

ரெயில் நிலையங்களில் ‘மெட்டல் டிடெக்டர்’ கருவி அமைத்து பயணிகளின் உடமைகளை சோதனை செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த பாதுகாப்பு பணிகளில் மாவட்டம் முழுவதும் சுமார் 1000–க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெறும் சுதந்திர தினவிழாவில் போலீசாரின் அணிவகுப்பு மரியாதை நடைபெற இருப்பதால் அதற்கான ஒத்திகையில் நேற்று போலீசார் ஈடுபட்டனர். இந்த ஒத்திகை நிகழ்ச்சி நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது. இந்தநிகழ்ச்சியில் போலீசார் துப்பாக்கி ஏந்தி அணிவகுப்பில் ஈடுபட்டனர்.


Related Tags :
Next Story