வாழப்பாடி அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த பெயிண்டர் கைது


வாழப்பாடி அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த பெயிண்டர் கைது
x
தினத்தந்தி 13 Aug 2017 3:37 AM IST (Updated: 13 Aug 2017 3:37 AM IST)
t-max-icont-min-icon

வாழப்பாடி அருகே 17 வயது மதிக்கத்தக்க சிறுமி கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்றாள்.

வாழப்பாடி,

பின்னர் அந்த சிறுமி வீடு திரும்பவில்லை. இதையடுத்து சிறுமியை அக்கம்பக்கத்திலும், உறவினர் வீடுகளில் அவளுடைய பெற்றோர் தேடி பார்த்தனர். இருந்தபோதிலும் சிறுமியை காணவில்லை. இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் வாழப்பாடி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், மேட்டுப்பட்டி பெருமாபாளையம் கிராமத்தை சேர்ந்த பெயிண்டர் பார்த்திபன் (வயது 23) என்பவர், சிறுமியை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து பார்த்திபன் கைது செய்யப்பட்டதுடன், சிறுமி மீட்கப்பட்டாள்.



Next Story