போலி கையெழுத்திட்டு ரூ.17 லட்சம் கையாடல் செய்ததாக முன்னாள் ஊராட்சி செயலாளர் கைது


போலி கையெழுத்திட்டு ரூ.17 லட்சம் கையாடல் செய்ததாக முன்னாள் ஊராட்சி செயலாளர் கைது
x
தினத்தந்தி 12 Aug 2017 10:19 PM GMT (Updated: 12 Aug 2017 10:19 PM GMT)

சேலம் மாவட்டம் மேச்சேரி ஒன்றியத்திற்குட்பட்ட வெள்ளார் ஊராட்சி செயலாளராக பணிபுரிந்தவர் மூர்த்தி(வயது40). இவர் மேட்டூர் அருகே உள்ள செங்காடு பகுதியை சேர்ந்தவர்.

சேலம்,

இவர் அந்த பகுதியில் நடந்த வேலைகளுக்கு ஊராட்சி சார்பில் வழங்கும் காசோலைகளில் போலி கையெழுத்திட்டு பல லட்சம் ரூபாய்க்கு கையாடல் செய்ததாக புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் மேச்சேரி ஒன்றிய வட்டார வளர்ச்சி அதிகாரி குணசேகரன், ஆவணங்களை ஆய்வு செய்தார்.

அதாவது ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் கடந்த ஜூன் மாதம் வரை உள்ள காலக்கட்டத்தில் மூர்த்தி, காசோலை மூலம் ரூ.16 லட்சத்து 97 ஆயிரத்து 333 கையாடல் செய்தது ஆய்வின்போது கண்டறியப்பட்டது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜனிடம் வட்டார வளர்ச்சி அதிகாரி குணசேகரன் புகார் கொடுத்தார்.

ஊராட்சி செயலாளர் கைது

அந்த புகார் மனுவை விசாரித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு அவர் உத்தரவிட்டார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதற்கிடையே மூர்த்தி பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

இந்த நிலையில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நேற்று முன்னாள் ஊராட்சி செயலாளர் மூர்த்தியை கைது செய்தனர்.


Next Story