இருவேறு விபத்துகளில் 2 பேர் பலி


இருவேறு விபத்துகளில் 2 பேர் பலி
x
தினத்தந்தி 14 Aug 2017 3:00 AM IST (Updated: 14 Aug 2017 2:05 AM IST)
t-max-icont-min-icon

இருவேறு விபத்துகளில் 2 பேர் பலியானார்கள்.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த காக்களூரை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகன் சரத்குமார் (வயது 22). இவர் நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் வேலையின் காரணமாக பூந்தமல்லி நோக்கி சென்று கொண்டிருந்தார்.

திருவள்ளூரை அடுத்த ஆண்டர்சன்பேட்டை சாலையில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த டிராக்டர் ஒன்று எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் து£க்கி வீசப்பட்ட சரத்குமார் பலத்த காயம் அடைந்தார்.

இதை பார்த்த டிராக்டர் டிரைவர் டிராக்டரை அங்கேயே விட்டு விட்டு தப்பிச்சென்று விட்டார். இது குறித்து அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் உடனடியாக சரத்குமாரை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனில்லாமல் சரத்குமார் பரிதாபமாக இறந்து போனார்.

இது குறித்து வெள்ளவேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலிங்கம், சப்–இன்ஸ்பெக்டர் தமிழ்செல்வன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பிச்சென்ற டிராக்டர் டிரைவரை தேடி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை சேர்ந்தவர் கந்தசாமி (63). திருவள்ளூரில் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர் வாலாஜாபாத்தில் இருந்து காஞ்சீபுரத்தை அடுத்த இளையனார்வேலூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இளையனார்வேலூர் பஸ் நிறுத்தம் அருகே செல்லும்போது காஞ்சீபுரத்தில் இருந்து இளையனார்வேலூர் நோக்கி சென்ற அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் கந்தசாமி படுகாயம் அடைந்தார். இதையடுத்து அவர் காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

இது குறித்து மாகரல் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிக்செல்வன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.


Next Story