பனை மரங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் தமிழர் கழக மாநாட்டில் தீர்மானம்
பனை மரங்களை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழர் கழக மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருச்செந்தூர்,
திருச்செந்தூர் அருகே அடைக்கலாபுரத்தில் தமிழர் கழகம் சார்பில், பனை தொழிலாளர்கள் பாதுகாப்பு மாநாடு நடந்தது. மாநில பொதுச்செயலாளர் சரவணகுமார் தலைமை தாங்கினார். அய்யா வைகுண்டர் தலைமைபதி பாலபிரஜாபதி அடிகளார் மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் தங்க பெருமாள் வரவேற்று பேசினார்.
மாநாட்டில் பெருந்தலைவர் காமராஜர் உருவப்படத்தை காங்கிரஸ் பிரமுகர் பொன் பாண்டியனும், ‘தமிழர் தந்தை‘ சி.பா.ஆதித்தனார் உருவப்படத்தை அடைக்கலாபுரம் ஊர் தலைவர் ஆரோக்கியசாமியும், பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உருவப்படத்தை டேனியல் நாடாரும் திறந்து வைத்தனர்.
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:–
வெகுவாக அழிந்து வரும் பனை மரங்களை பாதுகாக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பனை மரங்களை அழித்து விளைநிலங்களை வீட்டுமனைகளாக மாற்றுகிறவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அனைத்து சாலைகளின் இருபுறமும் பனை மரங்களை வளர்க்க வேண்டும். பனை தொழிலாளர்கள் நலவாரியத்தை புதுப்பிக்க வேண்டும். கருப்புகட்டி, பனங்கிழங்கு, பனங்கற்கண்டு ஆகியவற்றை வெளிமாநிலங்களில் விற்பனை செய்ய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கள்ளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும். கலப்பட பதனீர் விற்பனையை தடுக்க வேண்டும்.
50 வயதான பனை தொழிலாளர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியமாக ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும். பனை தொழிலாளர்களுக்கு அரசு இலவச வீடு கட்டித்தர வேண்டும். பனை மரத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும் இழப்பீடாக வழங்க வேண்டும். பனை தொழிலாளர்களின் குழந்தைககள் உயர்கல்வி பயில அரசு நிதி உதவி வழங்க வேண்டும். பனை தொழிலாளர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். பனை தொழிலாளர்களுக்கு வட்டியில்லா கடன் வழங்க வேண்டும்.
மேற்கண்டவை உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநாட்டில் காயல்பட்டினம் முன்னாள் நகரசபை தலைவி ஆபிதா ஷேக், வக்கீல் ஜேசுராஜ், வட்டார அமைப்பாளர் சக்திவேல், அவை தலைவர் கடற்கரையாண்டி, இளைஞர் அணி தலைவர் பாலசுப்பிரமணியம், நகர தலைவர்கள் கணேசன் (ஆறுமுகநேரி), யோசுவா (குரும்பூர்), பொருளாளர் ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். நகர மகளிர் அணி செயலாளர் அழகுரதி நன்றி கூறினார்.

Related Tags :
Next Story