தொடர் விடுமுறை எதிரொலி மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்


தொடர் விடுமுறை எதிரொலி மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
x
தினத்தந்தி 15 Aug 2017 4:15 AM IST (Updated: 15 Aug 2017 3:25 AM IST)
t-max-icont-min-icon

மாமல்லபுரம் நகரம் சர்வதேச அளவில் உலக புராதன நகரமாக திகழ்வதால் இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான வெளிநாட்டு, உள்நாட்டு பயணிகள் வந்து செல்கின்றனர்.

மாமல்லபுரம்,

காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரம் நகரம் சர்வதேச அளவில் யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்ட உலக புராதன நகரமாக திகழ்வதால் இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான வெளிநாட்டு, உள்நாட்டு பயணிகள் வந்து செல்கின்றனர். நூற்றுக்கணக்கான சுற்றுலா வாகனங்கள் வருகின்றன.

இந்தநிலையில் சனி, ஞாயிறு மற்றும் கிருஷ்ணஜெயந்தி, சுதந்திர தினம் என 4 நாட்கள் தொடர்ந்து விடுமுறை என்பதால் மாமல்லபுரத்தில் வழக்கத்தை விட சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்தனர். கடற்கரை கோவில், ஐந்துரதம், அர்ச்சுனன் தபசு, பழைய கலங்கரை விளக்கம் உள்ளிட்ட புராதன பகுதிகள் பயணிகள் கூட்டத்தால் நிரம்பி காணப்பட்டது.

பயணிகள் வருகை அதிகம் இருந்ததால் சுற்றுலா வாகனங்களால் மாமல்லபுரத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளால் கடற்கரை சாலை, அர்ச்சுனன் தபசு ஆகிய இடங்களில் வாகனங்களை நிறுத்த முடியாமல் சுற்றுலா வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.


Next Story