அரசு ஆஸ்பத்திரியில் தேசிய கொடி ஏற்றும்போது செல்போனில் பேசிக்கொண்டு இருந்த மருத்துவ அலுவலர்


அரசு ஆஸ்பத்திரியில் தேசிய கொடி ஏற்றும்போது செல்போனில் பேசிக்கொண்டு இருந்த மருத்துவ அலுவலர்
x
தினத்தந்தி 15 Aug 2017 11:00 PM GMT (Updated: 15 Aug 2017 9:26 PM GMT)

ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் தேசிய கொடியேற்றும் போது மருத்துவ அலுவலர் கென்னடி செல்போனில் பேசிக்கொண்டு இருந்தார்.

ஆம்பூர்,

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சுதந்திர தின விழா நடந்தது. இதில் ஆர்.பாலசுப்பிரமணி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு தேசிய கொடி ஏற்றினார்.

அப்போது அவர் அருகில் நின்று கொண்டிருந்த மருத்துவ அலுவலர் டாக்டர் கென்னடி செல்போனில் பேசிக்கொண்டே இருந்தார். எம்.எல்.ஏ. கொடியேற்றி, கொடிக்கு ‘சல்யூட்’ அடிக்கும்போது கூட அவர் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார். இதனை கவனித்த எம்.எல்.ஏ. அவரது கையை தட்டினார். அப்போது மருத்துவ அலுவலர் செல்போனில் பேசியவாறே ‘சல்யூட்’ அடித்தார். இறுதியாக நாட்டுப்பண் பாடும்போது செல்போனை வைக்காத மருத்துவ அலுவலர் அங்கிருந்து சிறிதுதூரம் தள்ளி நின்று கொண்டு செல்போனில் பேசிக்கொண்டே இருந்தார்.

மருத்துவ அலுவலரின் இந்த செயல் ஆஸ்பத்திரியில் இருந்தவர்களை அதிர்ச்சி அடையச் செய்தது.

இதேபோல் ஆம்பூர் அருகே மின்னூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைத்து அரசு அலுவலகங்களிலும் கொடியேற்ற வேண்டும்.

ஆனால் ஆரம்ப சுகாதார நிலையத்தில் யாரும் கொடியேற்றவில்லை. இதனை அறிந்த ஊர் பொதுமக்கள் 20-க்கும் மேற்பட்டோர் ஒன்று சேர்ந்து அங்கு சென்று பணியில் இருந்த டாக்டரிடம் கேட்டனர்.

இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Related Tags :
Next Story