கரூர் அருகே “நூடுல்ஸ்”சாப்பிட்ட பள்ளி மாணவி சாவு போலீசார் விசாரணை


கரூர் அருகே “நூடுல்ஸ்”சாப்பிட்ட பள்ளி மாணவி சாவு போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 16 Aug 2017 4:00 AM IST (Updated: 16 Aug 2017 2:57 AM IST)
t-max-icont-min-icon

கரூர் அருகே “நூடுல்ஸ்” சாப்பிட்ட பள்ளி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.

வெள்ளியணை,

கரூர் அருகே உள்ள சின்னமூக்கணாங்குறிச்சியை அடுத்த பெரியவரப்பட்டியை சேர்ந்தவர் சரவணன். விவசாயியான இவருடைய மகள் ஜீவசக்தி (வயது 14). அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்த ஜீவசக்தி, கடந்த 13-ந் தேதி “நூடுல்ஸ்” சாப்பிட்டுள்ளார். தொடர்ந்து அன்று மாலை தனது தம்பியுடன், ஜீவசக்தி வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டு இருந்தார்.

அப்போது திடீரென ஜீவசக்திக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரது பெற்றோர் அவரை சிகிச்சைக்காக கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவர் சிகிச்சை பலன் இன்றி நேற்று மதியம் பரிதாபமாக இறந்தார். “நூடுல்ஸ்” சாப்பிட்டதால் தான் தனது மகள் இறந்ததாக சரவணன் போலீசில் புகார் செய்தார். இதுகுறித்து வெள்ளியணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story