தாராபுரத்தில், இன்று நடக்கும் விவசாயிகள் ஆதரவு ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும்


தாராபுரத்தில், இன்று நடக்கும் விவசாயிகள் ஆதரவு ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும்
x
தினத்தந்தி 15 Aug 2017 11:27 PM GMT (Updated: 2017-08-16T04:57:32+05:30)

தாராபுரத்தில், இன்று நடக்கும் விவசாயிகள் ஆதரவு ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும் திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் அறிக்கை

திருப்பூர்,

திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் இல.பத்மநாபன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

மத்திய, மாநில அரசுகளின் விவசாய விரோத கொள்கைகளை கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வலியுறுத்தியும், காவிரி டெல்டா சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்கக்கோரியும் விவசாய சங்கங்கள் ஒன்றிணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் இன்று(புதன்கிழமை) காலை 10 மணிக்கு தாராபுரம் பஸ் நிலையம் அருகில் நடக்கிறது.

ஆர்ப்பாட்டத்துக்கு தி.மு.க. மாநில இளைஞர் அணி செயலாளர் மு.பெ.சாமிநாதன் தலைமை தாங்குகிறார். நான்(இல.பத்மநாபன்) முன்னிலை வகிக்கிறேன். விவசாயிகளின் நியாயமான கோரிக்கையை வலியுறுத்தி நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தோழமை கட்சி தலைவர்கள் ஆதரவு தெரிவித்து உள்ளனர். தி.மு.க. நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள், துணை அமைப்பாளர்கள் என அனைத்து தரப்பினரும் பங்கேற்க வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.


Next Story