‘நாங்கள் உறுதியாக நம்புவதை தான் படமாக தயாரிப்போம்’ நடிகர் அமீர்கான் அறிக்கை


‘நாங்கள் உறுதியாக நம்புவதை தான் படமாக தயாரிப்போம்’ நடிகர் அமீர்கான் அறிக்கை
x
தினத்தந்தி 15 Aug 2017 11:32 PM GMT (Updated: 2017-08-16T05:02:02+05:30)

“நாங்கள் உறுதியாக நம்புவதை தான் படமாக தயாரிப்போம்” என்று நடிகர் அமீர்கான் தெரிவித்துள்ளார்.

மும்பை,

இந்தி நடிகர் அமீர்கானின் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘தங்கல்’ படம் பல்வேறு மொழிகளில் வெளியாக வசூலை வாரி குவித்தது. இந்த நிலையில், அவரது நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம், ‘சீக்ரட் சூப்பர் ஸ்டார்’.

தங்கல் படத்தில் அமீர்கானின் சிறுவயது மகளாக நடித்த சாய்ரா வாசிம், இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். இதனால், சீக்ரட் சூப்பர் ஸ்டார் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

மகத்தான வெற்றி

இந்த நிலையில், 52 வயது நடிகர் அமீர்கான் வெளியிட்ட அறிக்கையில், “நாங்கள் உறுதியாக நம்புவதை தான் எப்போதும் படமாக தயாரிப்போம். அதிர்ஷ்டவசமாக திறமைவாய்ந்த எழுத்தாளர்கள், இயக்குனர்கள் என்னிடம் நல்ல கதைகளுடன் வருகிறார்கள். அவை மகத்தான வெற்றியும் பெற்று தந்திருக்கின்றன. நல்ல திறமையானவர்களுடன் நான் பணியாற்றி வருகிறேன்” என்று கூறியிருக்கிறார்.

இயக்குனர் அத்வைத் சந்தன் இயக்கியுள்ள சீக்ரட் சூப்பர் ஸ்டார் படம் அக்டோபர் 18-ந் தேதி திரைக்கு வருகிறது. சாதாரண குடும்பத்தை சேர்ந்த சிறுமி, தன்னுடைய கனவை அடைய எப்படியெல்லாம் போராடுகிறார் என்பதே இந்த படத்தின் மையக்கரு என்று கூறப்படுகிறது.

Next Story