மத்திய, மாநில அரசுகளின் விவசாய விரோத போக்கை கண்டித்து அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம்
ஏரலில் அனைத்து கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஏரல்,
மத்திய, மாநில அரசுகளின் விவசாய விரோத போக்கை கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க கோரியும், தமிழகத்தில் உள்ள அனைத்து விவசாயிகளின் விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வலியுறுத்தியும், ஏரல் காந்தி சிலை அருகில் விவசாயிகள் மற்றும் அனைத்து கட்சி சார்பில், நேற்று காலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தி.மு.க. தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.
தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார், இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட துணை செயலாளர் கரும்பன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல செயலாளர் தமிழினியன், ஆதி தமிழர் கட்சி தெற்கு மாவட்ட செயலாளர் சண்முகவேல், திராவிடர் கழக மண்டல தலைவர் பால் ராஜேந்திரன், மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட பொறுப்பாளர் ஜாகீர் உசைன், ஆதி தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் கவுதமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னாள் எம்.பி. ஜெயதுரை, தி.மு.க. மாநில மாணவர் அணி துணை செயலாளர் உமரிசங்கர், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் காளிதாஸ், நகர காங்கிரஸ் தலைவர் பாக்கர் அலி, வட்டார தலைவர் சுயம்புலிங்கம், நட்டாத்தி முன்னாள் பஞ்சாயத்து தலைவர் பண்டாரம் மற்றும் திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story