அனுமதியின்றி சுதந்திரதின ஊர்வலம் பா.ஜ.க. நிர்வாகிகள் மீது வழக்கு
ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ.க. சார்பில் அனுமதியின்றி சுதந்திரதின ஊர்வலம், நிர்வாகிகள் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ.க. சார்பில் நேற்று முன்தினம் சுதந்திரதினத்தன்று அரண்மனையில் இருந்து ஊர்வலமாக வந்து அரசு ஆஸ்பத்திரி முன்பு தேசியக்கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு முறையாக போலீஸ் அனுமதி பெறவில்லை என்பதால் மாநில துணை தலைவர்கள் குப்புராம், சுப.நாகராஜன், மாவட்ட தலைவர் முரளிதரன், இளைஞரணி தலைவர் மணிமாறன், துணை தலைவர் குமார் ஆகியோர் மீது ராமநாதபுரம் பஜார் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story