வள்ளிமலை அருகே தினகரன் உருவ பொம்மை எரிப்பு


வள்ளிமலை அருகே தினகரன் உருவ பொம்மை எரிப்பு
x
தினத்தந்தி 25 Aug 2017 10:15 PM GMT (Updated: 2017-08-26T02:12:22+05:30)

வள்ளிமலை அருகே நேற்று மாலை டி.டி.வி.தினகரன் உருவ பொம்மை எரிக்கப்பட்டது.

சிப்காட் (ராணிப்பேட்டை),

வள்ளிமலை கோவில் பஸ் நிறுத்தம் அருகே நேற்று மாலை டி.டி.வி.தினகரன் உருவ பொம்மை எரிக்கப்பட்டது. சோளிங்கர் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் சோமநாதபுரம் சின்னதுரை தலைமை தாங்கினார்.

இதில் ஒன்றிய பொருளாளர் சுப்பிரமணி, ஒன்றிய துணை செயலாளர் சேகர், மாவட்ட பிரதிநிதிகள் உமாசேட்டு, சேகர், ஒன்றிய துணை செயலாளர் சாந்தி கோவிந்தசாமி உள்பட ஒன்றிய பொறுப்பாளர்கள், ஊராட்சி மற்றும் கிளை செயலாளர்கள் கலந்து கொண்டு டி.டி.வி. தினகரனை கண்டித்து கோ‌ஷம் போட்டு உருவ பொம்மை எரித்தனர்.

இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story