டெல்லியில் விவசாயிகள் நடத்துவது அரசியல் போராட்டம் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி


டெல்லியில் விவசாயிகள் நடத்துவது அரசியல் போராட்டம் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
x
தினத்தந்தி 31 Aug 2017 6:45 AM IST (Updated: 31 Aug 2017 1:08 AM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் விவசாயிகள் நடத்துவது அரசியல் போராட்டம் என்று பிரதமரின் நியூ இந்தியா திட்ட தொடக்க விழாவில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

மேட்டுப்பாளையம்,

பிரதமரின் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க சபதம் எடுப்போம், சாதிப்போம், நியூ இந்தியா சிந்தனை 2017–2022 என்ற திட்டத்தின் தொடக்க விழா மற்றும் விழிப்புணர்வு கருத்தரங்கம் கோவை மாவட்டம் காரமடை அருகே விவேகானந்தபுரத்தில் உள்ள இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழகம், வேளாண்மை அறிவியல் நிலையத்தில் நேற்று நடைபெற்றது.

இதற்கு கோவை அவினாசிலிங்கம் கல்வி அறக்கட்டளை நிறுவனங்களின் தலைவர் மீனாட்சிசுந்தரம் தலைமை தாங்கினார். முதுநிலை விஞ்ஞானி மற்றும் அறிவியல் நிலைய தலைவர் குமாரவடிவேல் வரவேற்றார்.

இதில், பிரதமரின் திட்டத்தை மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்து பேசினார். முன்னதாக அவர் புதிய இந்திய உறுதிமொழியை படித்தார். விழாவில், செல்வராஜ் எம்.பி., ஓ.கே.சின்னராஜ் எம்.எல்.ஏ., தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் கே.ராமசாமி, விரிவாக்க கல்வி இயக்குனர் எச்.பிலிப், ஹைதராபாத் வேளாண்மை ஆராய்ச்சி கழக இயக்குனர் சாரிஅப்பாஜி (பொறுப்பு), புதுடெல்லி இந்திய வேளாண் ஆராய்ச்சி கழக வேளாண்மை பொறியியல் துணை இயக்குனர் கே.அழகுசுந்தரம் ஆகியோர் பேசினர்.

இதைத்தொடர்ந்து வேளாண் மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் நடைபெற்ற கண்காட்சியை பொன்.ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

அத்திக்கடவு– அவினாசி திட்டத்தை தற்போது உள்ள மத்திய, மாநில அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றால் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். விவசாய விளை பொருட் களுக்கு நல்ல விலை கிடைக்காமல் இருப்பது, விலை நிர்ணயம் செய்வது குறித்த விழிப்புணர்வை விவசாயிகள் அடைய வேண்டும். புதுடெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டம் அரசியல் போராட்டம் ஆகும். தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு தமிழகத்திற்கு திரும்பி வந்து விடுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story