ஓணம் பண்டிகையையொட்டி யஷ்வந்தபுரம்–கொச்சுவேலி இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கம்
ஓணம் பண்டிகையையொட்டி கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த பெங்களூரு யஷ்வந்தபுரம்–கொச்சுவேலி இடையே சிறப்பு ரெயில்கள் இயங்க உள்ளதாக தென்மேற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
பெங்களூரு,
ஓணம் பண்டிகையையொட்டி கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த பெங்களூரு யஷ்வந்தபுரம்–கொச்சுவேலி இடையே சிறப்பு ரெயில்கள் இயங்க உள்ளதாக தென்மேற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
சிறப்பு ரெயில்கள்ஓணம் பண்டிகையையொட்டி கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த இருமார்க்கமாக பெங்களூரு யஷ்வந்தபுரம்–கொச்சுவேலி இடையே தட்கல் சிறப்பு ரெயில் (வண்டிஎண்: 06575/06576) இயக்கப்பட உள்ளது.
அதன்படி, பெங்களூரு யஷ்வந்தபுரம் ரெயில் நிலையத்தில் இருந்து இன்று(வெள்ளிக்கிழமை) மாலை 3.20 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06575) நாளை(சனிக்கிழமை) காலை 6.50 மணிக்கு கொச்சுவேலியை சென்றடையும். மறுமார்க்கமாக கொச்சுவேலி ரெயில் நிலையத்தில் இருந்து நாளை (சனிக்கிழமை) மதியம் 12.40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06576) மறுநாள் அதிகாலை 4.30 மணிக்கு யஷ்வந்தபுரத்தை வந்தடையும்.
இந்த சிறப்பு ரெயில்கள் இருமார்க்கமாகவும் பானசவாடி, கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை, திருப்பத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர், பாலக்காடு, ஒத்தபாலம், திருச்சூர், ஆலுவா, எர்ணாகுளம் டவுன், கோட்டயம், திருவல்லா, காயன்குளம் மற்றும் கொல்லம் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.
ரெயில்கள் ரத்துமும்பையில் பெய்து வரும் கனமழையின் காரணமாக பெங்களூருவில் இருந்து இன்று வடமாநிலங்களுக்கு புறப்பட்டு செல்ல வேண்டிய 3 ரெயில்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதன்படி, கே.எஸ்.ஆர்.பெங்களூரு–மும்பை சி.எஸ்.டி.எம். உதயன் எக்ஸ்பிரஸ் ரெயில் (11302), பெங்களூரு கண்டோன்மெண்ட்–கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரெயில்(12509), பெங்களூரு கண்டோன்மெண்ட்–காமாக்யா எக்ஸ்பிரஸ் ரெயில்(12503) ஆகிய ரெயில்களின் சேவை இன்று ரத்து செய்யப்பட்டு உள்ளது.
மேலும், நாளை பெங்களூரு யஷ்வந்தபுரம்–காமாக்யா ஏ.சி. எக்ஸ்பிரஸ் ரெயிலின்(12551) சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேற்கண்ட தகவல் தென்மேற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.