ரூ.14 கோடியே 80 லட்சம் செலவில் துறைமுக முகத்துவாரம் தூர்வாரியது குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்


ரூ.14 கோடியே 80 லட்சம் செலவில் துறைமுக முகத்துவாரம் தூர்வாரியது குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்
x
தினத்தந்தி 1 Sept 2017 5:00 AM IST (Updated: 1 Sept 2017 2:11 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரி துறைமுக முகத்துவாரம் ரூ.14கோடியே 80 லட்சம் செலவில் தூர்வாரியது குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று அன்பழகன் எம்.எல்.ஏ. கூறினார்.

புதுச்சேரி,

புதுவையில் காங்கிரஸ் அரசு ஆட்சிக்கு வந்த போது வீட்டுக்கு ஒருவருக்கு வேலை தருவோம் என்று வாக்குறுதி அளித்தது. ஆனால் முதல்–அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அரசு அதனை மறந்து இளைஞர்களுக்கும், பொது மக்களுக்கும் துரோகம் இழைத்துள்ளார். கடந்த ஆண்டு புதிய தொழிற்கொள்கையை சட்டமன்றத்தில் இந்த அரசு அறிவித்தது. ஆனால் இன்று வரை புதுச்சேரி மாநிலத்திற்கு புதியதாக ஒரு தொழிற்சாலை கூட கொண்டுவரப்படவில்லை.

முதல்–அமைச்சர் நாராயணசாமி கொண்டு வந்துள்ள புதிய தொழிற்கொள்கையின் மூலம் ஒருவர் கூட புதியதாக தொழிற்சாலை ஆரம்பிக்க புதுச்சேரி வரவில்லை. புதிய தொழிற்சாலை கொண்டுவரவும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பெற்று கொடுக்கவும் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இதனை மக்களை ஏமாற்றும் விதமாக தொழிற்சாலைகளை வரவிடாமல் சிலர் தடுக்கின்றனர் என்று முதல்–அமைச்சர் கருத்து கூறியுள்ளார்.

புதுச்சேரி துறைமுகத்தில் 3 லட்சம் கியூபிக் மீட்டர் மண்ணை அகற்ற ரூ.14கோடியே 80 லட்சத்திற்கு ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் 60 ஆயிரம் கியூபிக் மீட்டர் மண்தான் அகற்றப்பட்டது. தவறான நபர்களை கொண்டு 3 லட்சம் கியூபிக் மீட்டர் மண் அள்ளப்பட்டதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது. 1.5 லட்சம் கியூபிக் மீட்டர் மண் அகற்றப்பட்டு இருந்தாலும் படகுகள் தற்போது தடையின்றி செல்லும். ஆனால் முகத்துவாரத்தில் அடைப்பு ஏற்பட்டு கடந்த 20 நாட்களாக ஒரு படகுகூட கடலுக்குள் செல்ல முடியாத நிலை உள்ளது.

இந்த வி‌ஷயத்தில் புதுச்சேரி அரசு, கவர்னர், தலைமை செயலர் என அனைவரும் சேர்ந்து முறைகேடு செய்துள்ளனர். எனவே ரூ.14கோடியே 80 லட்சத்திற்கு தூர்வாரும் திட்டத்திற்கு அனுமதித்தது குறித்து சி.பி.ஐ. தானாக விசாரணை மேற்கொள்ள வேண்டும். இது குறித்து ஓரிரு நாளில் அ.தி.மு.க. சார்பில் சி.பி.ஐ.க்கு மனு அளிக்கப்படும்.

ஜெயலலிதா முதல்–அமைச்சராக இருந்த போது என்னை புதுவை மாநில அ.தி.மு.க. சட்டமன்ற தலைவராக அறிவித்தார். புதுவை மாநிலத்தை பொறுத்தவரை எந்த முடிவு எடுத்தாலும் 4 எம்.எல்.ஏ.க்களும் கலந்து பேசி தான் முடிவு எடுப்போம். புதுச்சேரியில் எங்களுக்குள் எந்த முரண்பாடும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story