மாணவி அனிதா தற்கொலை எதிரொலி: ஆம்பூரில் விடுதலை சிறுத்தை கட்சியினர் சாலை மறியல்


மாணவி அனிதா தற்கொலை எதிரொலி: ஆம்பூரில் விடுதலை சிறுத்தை கட்சியினர் சாலை மறியல்
x
தினத்தந்தி 2 Sept 2017 4:30 AM IST (Updated: 1 Sept 2017 10:59 PM IST)
t-max-icont-min-icon

நீட் தேர்வில் மதிப்பெண் பெறாததால் மருத்துவ படிப்பில் சேர முடியாத அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார்.

ஆம்பூர்,

பிளஸ்–2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த போதிலும் நீட் தேர்வில் மதிப்பெண் பெறாததால் மருத்துவ படிப்பில் சேர முடியாத அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். இதனால் மத்திய, மாநில அரசை கண்டித்து மாநிலம் முழுவதும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

 ஆம்பூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் வக்கீல் எஸ்.சந்திரன் தலைமையில் பஸ் நிலையத்தில் விடுதலை சிறுத்தை கட்சியினர் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 அதை தொடர்ந்து நகர தலைவர் சக்தி, தொகுதி அமைப்பாளர் வெங்கடேசன், நிர்வாகிகள் யுவராஜ், நாகப்பன், தமிழ்செல்வன், ஒன்றிய செயலாளர் சரவணன், ஜெயராஜ் உள்ளிட்ட 20 பேரை ஆம்பூர் டவுன் போலீசார் கைது செய்தனர்.


Next Story