கள்ளக்காதலி –மகளை அடித்து கொன்றவருக்கு ஆயுள் தண்டனை புனே கோர்ட்டு தீர்ப்பு
கள்ளக்காதலி மற்றும் அவரது மகளை அடித்து கொன்றவருக்கு ஆயுள் தண்டனை விதித்து புனே செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
புனே,
கள்ளக்காதலி மற்றும் அவரது மகளை அடித்து கொன்றவருக்கு ஆயுள் தண்டனை விதித்து புனே செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
கள்ளக்காதல்புனே மான்காவ் பகுதியை சேர்ந்த பெண் சுபத்ரா (வயது35). இவருக்கு 2 வயதில் பசந்தி என்ற மகள் இருந்தாள். இந்த நிலையில், சுபத்ராவுக்கு கனகராஜ் (64) என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் கணவரை பிரிந்து கனகராஜ் உடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில், சுபத்ராவின் நகை ஒன்றை கனகராஜ் செலவுக்காக எடுத்து விற்று விட்டார். அதை திருப்பி கொடுக்காததால் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டு வந்தது.
ஆயுள் தண்டனைசம்பவத்தன்று ஏற்பட்ட சண்டையின் போது, சுபத்ராவையும், அவரது மகள் பசந்தியையும் ஆயுதத்தால் கனகராஜ் அடித்து கொன்று விட்டு ஓடி விட்டார். இந்த சம்பவம் கடந்த 2013–ம் ஆண்டு நடந்தது. புனே குற்றப்பிரிவு போலீசார் ஒரு மாதத்திற்கு பிறகு அவரை கைது செய்தனர். பின்னர் அவர் மீது புனே செசன்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு விசாரணையின் போது கனகராஜ் மீதான கொலை குற்றச்சாட்டு தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. அப்போது குற்றவாளி கனகராஜுக்கு நீதிபதி ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.