மசூதி அருகே மதுக்கடை அமைக்க எதிர்ப்பு; முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்


மசூதி அருகே மதுக்கடை அமைக்க எதிர்ப்பு; முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 3 Sept 2017 4:30 AM IST (Updated: 3 Sept 2017 12:27 AM IST)
t-max-icont-min-icon

பவானி மசூதி அருகில் மதுக்கடை அமைக்க முஸ்லிம்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்- சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இதனால் உடனே கடை மூடப்பட்டது.

பவானி,

பவானி பழைய பஸ் நிலையம் அருகே சுன்னத் ஜமாத் மசூதி உள்ளது. இந்த மசூதி அமைந்துள்ள இடத்தில் இருந்து சுமார் 250 அடி தூரத்தில் உள்ள ஒரு இடத்தில் நேற்று இரவு திடீரென அதிகாரிகள் லாரியில் மதுபாட்டில்களை கொண்டுவந்து டாஸ்மாக் கடை அமைத்தார்கள். இரவு நேரத்தில் கடை அமைக்கப்பட்டதால் அந்த பகுதி மக்களுக்கு எதுவும் தெரியவில்லை. நேற்று காலை புதிதாக மதுக்கடை அங்கு அமை க்கப்பட்டு இருப்பதை பார்த்து மதுப்பிரியர்கள் மகிழ்ந்தார்கள். ஆனால் பொதுமக்கள் பலர் ஆவேசமடைந்தார்கள்.

இந்தநிலையில் நேற்று காலை சுன்னத் ஜமாத் மசூதியில் பக்ரீத் சிறப்பு தொழுகை நடந்தது. வழிபாடு முடிந்ததும் முஸ்லிம்கள் நேராக புதிதாக அமைக்கப்பட்டு இருந்த டாஸ்மாக் கடைக்கு ஒன்று திரண்டு சென்றார்கள். பின்னர் ‘இங்கே மதுக்கடை அமைக்காதே‘ என்று கோஷம் எழுப்பியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். ஏராளமான முஸ்லிம்கள் பக்ரீத் நாளில் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் பவானி தாசில்தார் குணசேகரன், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், மாவட்ட டாஸ்மாக் அதிகாரி லியாகத் அலி ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார்கள். அதற்குள் போராட்டத்தில் ஈடுபட்டு இருந்த முஸ்லிம்கள் பவானி பழைய பஸ்நிலையத்தில் இருந்து புதிய பஸ்நிலையம் செல்லும் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டார்கள். உடனே போராட்டத்தில் ஈடுபட்டு இருந்த முஸ்லிம்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்கள்.

அப்போது முஸ்லிம்கள், ‘மசூதி இருக்கும் இடத்தில் இருந்து 250 அடி தூரத்தில் திடீரென இரவு நேரத்தில் மதுக்கடை அமைக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் சற்று தூரத்தில் ஒரு முருகன் கோவிலும், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கூடமும் இருக்கிறது. இங்கு மதுக்கடை அமைத்தால் எங்களுக்கு இடையூறாக இருக்கும். பள்ளிசெல்லும் மாணவிகளும் அச்சப்படுவார்கள். உடனே மதுக்கடையை இங்கிருந்து அகற்றவேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தார்கள்.

அதிகாரிகள் எவ்வளவு பேசியும் போராட்டக்காரர்கள் பின்வாங்கவில்லை. இதனால் வேறு வழியின்றி மதுக்கடையை அகற்றிக்கொள்கிறோம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அதற்கு போராட்டக்காரர்கள் உடனே அகற்றவேண்டும் என்றார்கள். அதை த்தொடர்ந்து ஒரு லாரி வரவழைக்கப்பட்டு, புதிதாக அமைக்கப்பட்டு இருந்த கடையில் அடுக்கிவைக் கப்பட்டு இருந்த மதுபாட்டில்கள் அதில் ஏற்றி அரசு மதுபான குடோனுக்கு கொண்டுசெல்லப்பட்டது.

Next Story