மாணவி அனிதா தற்கொலை: திட்டக்குடியில் தொல்.திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம்
மாணவி அனிதா தற்கொலைக்கு மத்திய, மாநில அரசுகளை கண்டித்து திட்டக்குடியில் தொல்.திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கடலூர்,
‘நீட்’ தேர்வுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்து போராடிய அரியலூர் மாணவி அனிதா, தனது மருத்துவப்படிப்பு கனவு தகர்ந்ததால் நேற்று முன்தினம் தற்கொலை செய்து கொண்டார்.
அவரது மறைவுக்கு மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கடலூர் மாவட்டத்தில் நேற்று பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்களும், மறியல் போராட்டங்களும் நடந்தது. கடலூர் சீமாட்டி சந்திப்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மாவட்ட செயலாளர் முல்லைவேந்தன் தலைமையில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷம் போட்டனர். இப்போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் விடுதலை சிறுத்தைகள் கட்சி நகர செயலாளர்கள் மு.செந்தில், ராஜதுரை, ஒன்றிய செயலாளர்கள் சுபாஷ், கலைஞர், இளையராஜா, மாவட்ட நிர்வாகிகள் செல்வம், மணிகண்டராஜா, சித்ரவேல், மாநில நிர்வாகிகள் ஸ்ரீதர், பாவாணன் உள்பட 25 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதேப்போல் குறிஞ்சிப்பாடியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 30 பேரை போலீசார் கைது செய்தனர்.
திட்டக்குடியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமை தாங்கி மத்திய–மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினார். இதில் மாவட்ட செயலாளர்கள் தயா தமிழன்பன், கருப்புசாமி, இளைஞரணி அமைப்பாளர் குமார், நிர்வாகிகள் வேலு, ஆனந்தன், செங்குட்டுவன், ராஜா அலெக்சாண்டர், மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஸ்ரீமுஷ்ணத்தில் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் செல்லப்பன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மத்திய–மாநில அரசுகளை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் ஒன்றிய செயலாளர் ரவி, மாவட்ட வர்த்தகர் அணி மாரிமுத்து, ஒன்றிய விவசாய அணி பட்டு. செந்தில், தொகுதி துணை செயலாளர் வெற்றிவேந்தன், நகர துணை செயலாளர் ரத்தினராஜா, ஒன்றிய துணை செயலாளர் பழனிசாமி, தானிவேல் மற்றும் பாஸ்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதனால் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது பற்றி தகவல் அறிந்த ஸ்ரீமுஷ்ணம் போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை சமாதானப்படுத்தி கலைந்து போகச்செய்தன்£.
காட்டுமன்னார்கோவில் பஸ் நிலையம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றிய செயலாளர் பரமேஸ்வரன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் திருநாவுக்கரசு, நிர்வாகிகள் பன்னீர்செல்வம், காமராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
காட்டுமன்னார்கோவிலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட செயலாளர் பிரகாஷ் தலைமை தாங்கினார். இதில் நிர்வாகிகள் இளங்கோவன், மகாலிங்கம், புகழேந்தி, விஜயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விருத்தாசலத்தில் மாரகசஸட கமயூனஸடு கடச சாரபல கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு வடடசெயலாளர அசோகன தலைமை தாஙகனார. இதில் நகர செயலாளர சவஞானம, வடடககுழு உறுபபனர குமரகுரு, வாலபர சஙக வடட செயலாளர கலைசசெலவன, வடடததலைவர ராயர, மாதரசஙக செயலாளர ஜூலயற்ஜெனறறா, பொருளாளர புஷபா ஆகயோர முனனலை வகததனர. இதில் வடுதலை சறுததைகள கடச மணடல செயலாளர தருமாறன கலநதுகொணடு கணடன உரையாறறனார். வக்கீல்கள் ராஜமோகன், மோகனராஜ, மறறும அருளசெலவன் உள்பட பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.