ரூ.2,000 நோட்டுகளுக்கு 100 ரூபாய் நோட்டுகள் தருவதாக கல்லூரி மாணவரிடம் ரூ.10 லட்சம் பறித்த 6 பேர் கைது
ரூ.2,000 நோட்டுகளுக்கு 100 ரூபாய் நோட்டுகள் தருவதாக கல்லூரி மாணவரிடம் ரூ.10 லட்சம் பறித்த 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
மும்பை,
ரூ.2,000 நோட்டுகளுக்கு 100 ரூபாய் நோட்டுகள் தருவதாக கல்லூரி மாணவரிடம் ரூ.10 லட்சம் பறித்த 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
கல்லூரி மாணவர்மும்பை பாந்திராவை சேர்ந்த கல்லூரி மாணவரின் தந்தை ஆயத்த ஆடை நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிலையில், அந்த கல்லூரி மாணவருக்கு அண்மையில் ஒருவர் அறிமுகம் ஆனார். அவர் புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் தந்தால் அந்த தொகைக்குரிய ரூ.100 நோட்டுகளும், 10 சதவீத கமிஷனும் தருவதாக ஆசை வார்த்தை கூறினார்.
இதை நம்பிய கல்லூரி மாணவர் சம்பவத்தன்று வீட்டில் இருந்த ரூ.10 லட்சத்துக்கான இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை தந்தைக்கு தெரியாமல் எடுத்து வந்து அந்த ஆசாமியிடம் கொடுத்தார்.
இந்த நிலையில், அந்த நபர் தனது நண்பர் ரூ.10 லட்சம் மற்றும் ரூ.10 சதவீத கமிஷனுக்கான 100 ரூபாய் நோட்டுகளை கொண்டு வருவதாக கூறினார். சிறிது நேரத்தில் அங்கு வந்த அந்த நபரின் நண்பர் பணத்தை வரும் வழியில் தொலைத்து விட்டதாக கூறினார்.
6 பேர் கைதுஇதை கேட்டு கல்லூரி மாணவர் அதிர்ச்சி அடைந்தார். அப்போது ஒரு காரில் வந்த 4 பேர் போலீசார் என கூறிக் அவரிடம் இருந்த பணத்தை பறித்தனர். மேலும் கல்லூரி மாணவரை தவிர மற்றவர்களை காரில் ஏற்றி சென்றனர்.
இதனால் சந்தேகம் அடைந்த கல்லூரி மாணவர் பி.கே.சி. போலீசில் புகார் கொடுத்தார். போலீஸ் விசாரணையில், அந்த கும்பல் கல்லூரி மாணவரை ஏமாற்றி பணத்தை பறித்து சென்றது தெரியவந்தது. மேலும் அவர்களது பெயர் சஞ்சய் போஸ்லே (49), மிலிந்த் ஜாதவ் (29), சுனில் குப்தா (45), ரமேஷ் மிஸ்ரா (27), ஆயாஸ் சேக் (46), குலாப் குரோஷி என்பது தெரியவந்தது. இதையடுத்து 6 பேரையும் நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர்.